பாடல்
இயந்திரத்தின் மெல்லிய ஒலியைத் தவிர , மற்றும்படி நிசப்தமே வாகனத்தை நிறைந்திருந்தது.
‘ நீண்ட பயணம் ‘ போகப் புறப்பட்டுவிட்ட ஒரு கரும்புலியை வழியனுப்பச் சென்று கொண்டிருந்த ஒரு பயணம்.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.ஆனால் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
அந்தக் கரும்புலியின் மனத்திரையில், கொடுரமான அந்தக் காலம்.
தெருத்தெருவாகப் பிணங்கள் , யுத்த டாங்கிகளின் இரும்புச் சங்கிலிகளால் நெரிக்கப்பட்ட உடலங்கள் , கற்பழிக்கப்பட்ட பெண்கள் , சீர்குலைந்து போயிருந்த தமிழீழம்….. எல்லாமே வந்து போயின.
அவற்றை நினைக்க நினைக்க தனக்குரிய அந்தத் தாக்குதல் திட்டம் மனதுக்குள் விரிந்தது.
செயல் முறையில் சொல்லித் தரப்பட்டவையே அந்தக் கரும்புலி திருப்பத் திரும்ப மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.
எந்தப் பிசகுமில்லாமல் அதனைச் செய்து முடிக்கவேண்டும் என்ற அந்த வேட்கையே அந்தக் கரும்புலியை ஆட்கொண்டது. அதனைச் சுற்றியே அந்தக் கரும்புலியினது நினைவுகள் வந்து கொண்டிருந்தன.
அதே போலவே…..
துல்லியமான வெற்றியாக அது நிறைவேற வேண்டுமென எண்ணங்கள் ஓட , அந்தக் கரும்புலியை வழியனுப்பச் சென்று கொண்டிருந்த போராளியும் வாகனத்தை ஓட்டிக் கொண்டேயிருந்தார்.
சிந்தனை வயப்பட்டிருந்த நீண்ட அமைதியினால் அருகில் யாருமற்றது போனற தனிமையுணர்வு எழ… தானறியாமலே ஒரு பாடலை அந்தப் போராளி உரத்துப் பாடிவிட்டார்;
பின்னாலிருந்து சிப்பொலி பரவி வாகனத்தை நிரப்பியபோது , சுதாகரித்துக் கொண்டு அவர் நிறுத்தி கொண்ட அந்தப் பாடல்.
” பிரபாகரன் நினைத்தது நடக்கும். அவன் புலிப்படை நெருப்பாற்றை நிந்திக் கடக்கும்….. ”
அந்தப் வாகனப்பயணம் முடிந்து , ‘ எல்லோரும் ‘ வழியனுப்பிவைக்க அடுத்த பயணம் தொடர்ந்து , போய்…. அன்றொரு நாளில் அந்தக் கரும்புலி போயே விட்டது.
எங்கள் மண்ணுக்கு ” இருண்ட நாட்களைத் ” தந்த போராட்டத்தின் பெரியதொரு தடைக்கல்லை , அந்தக் கரும்புலி கட்டியணைத்து தகர்த்தபோது.
எங்கள் போராட்டத்தின் ” வரலாற்றுப் பெருமை ” ஒன்றுக்கு உரித்துடையாகியது.
அடுத்து வந்த நாட்களில்…
அந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த ‘ அந்த ஒரு ‘ வீரன் , அங்கிருந்து செய்தி அனுப்பினான்.
கடைசி நாள் வரை அதே பாடலைத்தானாம் அந்தக் கரும்புலியின் வாயில்….
” பிரபாகரன் நினைத்தது நடக்கும் – அவன் புலிப்படை நெருப்பாற்றை நிந்திக் கடக்கும் ”
– உயிராயுதத்திலிருந்து……
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”