மானம்
தாக்குதலுக்கெனத் தேர்ந்;துதெடுக்கப் பட்டு ஒருவன் நிச்சயிக்கப்பட்டான்.
வேவு அறிக்கைகளின் அடிப்படையில் தாக்குதலுக்கு அவன் தயார்படுத்தப்பட்டான்.
விளக்க வகுப்புகள் நடந்தன.
செயல் முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சொல்லிக் கொடுத்தவற்றை அவன் சிறந்த முறையில் பிடித்துக் கொண்டான்.
பல்வேறு தேர்வுகளிலும் தேறிய அவனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அவன் தாக்குதல் ” தளத்திற்கு ” அனுப்பப்பட்டான்.
அங்கும் அவனுக்கு தாக்குதல் கேந்திரம் நேரடியாகக் காட்டி விளங்கப் படுத்தப்பட்டது.
அது பகைவனின் ” மூளை ”
தமிழர்களுக்கெதிரான போரின் ‘ மையம் ‘ அதுதான்.
எனவே , அந்த தாக்குதல் முக்கியத்துவம் மிக்கது.
ஆனால் , எல்லா ஏற்பாடுகளும் நிறைவாகியிருந்த போது….
கடைசி நேரத்தில் தாக்குதலுக்கென்று சென்றவன். தளம்பிவிட்டான். நம்பிக்கையோடு தயார் படுத்தப்பட்டவன் பிசகிவிட்டான்.
எதிரி உசாரடைந்து விடுவானானால் எல்லாமே பாழ்.
எனவே திட்டத்தை தாமதப்படுத்த முடியாதது , இன்றியமையாத தேவையாக எழுந்தது.
அப்படியானால் ஆள்……. ?
திரும்பப்போய் புதிதாக ஒருவனை தயார் பண்ணி ,கூட்டி வந்து……. அது சாத்தியமே இல்லாத சமாச்சாரம்.
அந்தத் தர்ம சங்கடமான நிலையில்….
வேறு வேலையின் பொருட்டு அங்கு போய் நின்ற இன்னொரு வீரன் அதனைத் தான் செய்வதாக முன்வந்தான்.
உடனடியாக திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அவன் புறப்படத்தயாரான்.
புறப்படும் போது வாகனத்தில் ஏறிக்கொண்டு அந்தத் ” தளத்தின் ” அதிபதியிடம் உணர்ச்சிமயமான முகத்தோடு சொல்லிவிட்டுப் போனான்.
” தமிழர்களாகப் பிறந்தவர்களுக்கு கொஞ்சமெண்டாலும் ரோசம் இருக்கோணும் ! ”
– உயிராயுதத்திலிருந்து……
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “