தேவை
இங்கு அவனுக்கு தாக்குதலக்கான பயிற்சி வழங்கப்பட்டுத் தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில்…
அங்கு இன்னொரு வீரன் தாக்குதலுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.
இவன் தான் தாக்குதலுக்கான கரும்புலிவீரன். ஆனால் , அவன்தான் அந்தத் தாக்குதல் தளத்தின் அதிபதி.
பயிற்சிகள் முடிந்து இவன் புறப்படத் தயாரன நேரத்தில் , அவனை வழியனுப்பி வைக்கிற போது , அனுப்பி வைத்தவர் ஒரு விடத்தை அவனுக்கு தெளிவுபடுத்தினார்.
ஏற்க்கனவே அங்கு ஒருவர் நிற்கிறார். அவர் தாக்குதலுக்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
அதாவது அவர்தான் இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார். உங்களுக்கு எல்லாவற்றையும் காட்டி விளக்கி அவர் சொல்லித் தருவார். அத்தோடு குறிப்பிட்ட இடம் வரையும் வாகனத்தை ஓட்டி வந்தும் தருவார்…..
இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவேன்றால் ….
…… தாக்குதலை செய்யப்போகிறது நீங்கள்தான். உங்களுக்குச் செய்ய இயலாமல் போனால் , அல்லது , செய்வது சரிவராமல் போனால் அவர்தான் இதைச் செய்வார்….
ஆனால் இந்த வேலையை இனிமேலும் நாங்கள் தொடர்ந்தும் செய்ய வேணும்…..
அவர் சொல்ல வந்த விடயத்தை அவன் பரிபூரணமாக விளங்கிக் கொண்டான்.
அந்தப் பெரிய நகரத்துத் தெருக்களின் மிகுதியான நெரிசலினால் , தாக்குதல் சறுக்கிக் கொண்டே போனது.
அரக்கமுடியாத வாகனப் போக்குவரத்தும் , அதிகூடிய சனச்சந்தடியும் தொடர்ந்து இடைஞ்சலைத் தந்து கொண்டேயிருந்தன.
இலக்கு கண்களில் படும்போது , அவன் இறங்கிக் கொண்டு இவனை அனுப்பி வைப்பான். வேகமாக நகர்ந்து இலக்கை அண்மிக்க முனையும் போது.
ஏதோ ஒரு தடை வரும்.
இப்படியாக தாக்குதல் இழுபட்டுக் கொண்டே போனது.
நெருக்கடியான போக்குவரத்துப் பாதைகளில் வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிராததால் , அந்த வீரனும் கூட வெகுவாகச் சிரமப்பட்டான்.
எத்தனையோ நாட்கள் போய்ப் போய் திரும்பி வர வேண்டியிரந்தது.
எனவே இலக்கு நெருங்கிவரும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால் , திருப்பப் பெற முடியாத பெறுமதி உடையது அது , உடனடியாக பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.
இவ்விதமாக உருவாகியிருந்த ஒரு சூழ்நிலையில் …..
அது எதிர்பாராத ஒரு சந்திப்பு
தேடித்திரிந்த இலக்கு மிக வசதியாக…….
மிக மிக வசதியாக எதிர்ப்பட்டது.
ஆனால் வாகனத்திற்குள் இருவருமே இருந்தார்கள். தளபதி ஓடிக் கொண்டிருந்தான். அருகு இருக்கையில் இவன். இவனிடம்தான் சுவிச்.
அவன் இறங்கிக்கொண்டு இவனை அனுப்புவதற்கெல்லாம் அவகாசமே கிடையாது. தாக்குத் தூரத்துக்குள் இலக்கு நெருங்கிவிட்டது.
மிக அரிய சந்தர்ப்பம் , தவறவிடவே முடியாது , தவறவிடக்கூடாது.
அமத்தடா…… தளபதி கத்தினான்.
ஆனால் அவன் அமத்தவில்லை.
இலக்கு அருகால் கழிந்து போய்க்கொண்டிருந்தது.
அமத்தனடா… தளபதி திரும்பவும் கத்தினான். கட்டளையிட்டான்….!
ஆனால் அவன் அமத்தவில்லை……….!
இலக்கு கடந்து நகர்ந்து தூர விலகிப் போய்விட்டது.
அவன் அமத்தவேயில்லை.
ஆத்திரமும் கோபமும் பொங்க எரிச்சலோடு தளபதி கேட்டான். ஏனடா அமத்தேல்லை … ? ……. பயந்து போனியோ ?
அந்த வீரன் அமைதியாகப் பதிலளித்தான். இந்த வேலை தொடர்ந்தும் நடக்கவேணுமென்றுதான் !
இதற்கு பின்னொரு நாளில் , அதே கரும்புலி வீரன் அதே இலக்கை , அதே திட்டத்தின்படி தாக்கியழித்தான்.
– உயிராயுதத்திலிருந்து……
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”