தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் வீரவணக்க நாள்
தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் வீரவணக்க நாள் இன்றாகும்.
இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் முல்லை மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் வீரவணக்க வணக்க நினைவுநாட்களில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்………..
தாய்மண்ணின் விடியலுக்காய் தன்னை உருக்கி ஒளிதந்த தீயாக தீபம்………………
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடியலின் வானின் தணியாத தாகத்துடன் சிறகு விரித்த வீரம்………………
தமிழீழத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் பங்குபற்றிவிட்டு ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26.09.2001 அன்று காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், வான்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி…………………….
இருள் முகம் போக்கும்
விடுதலை ஒளியின்
உயிர் அகம் அவரே!
உணர்வின் உருவே!!
நிரந்தரம் காக்கும்
கருணைக் கடலின்
அலைமுகம் அவரே!
உறையா வரமே!!
சாவு என்ற உயர் வரியை
சாய்த்து வாழும் வரலாறுகள்
தமிழர் மனவெளி எங்கும்
தவழ்ந்து வீசும் பூங்க்காற்றுக்கள்
காலத்தால் அழியாத
காவியத்தின் கரு ஊற்றுக்கள்
ஈகத்தால் இனத்தோரின்
இதயத்துள் வாழும் சொத்துக்கள்!!
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”