யாழ் நூலகம் எரிந்து நீறான நினைவு நாளில் ஆறாத வலியுடன்..
யாழ் நூலகம் எரிந்து நீறான நினைவு நாளில் ஆறாத வலியுடன்..
“இனவாத அரசின் கோரப்பசிக்கு தீனியானது எங்கள் அறிவுக்களஞ்சியம்
தமிழ் மனமெங்கு வியாபித்தது கடும்சினம்.
இருந்தும் என்ன செய்யமுடிந்தது.
எங்கள் அறிவுத்தாய் கருக்கிச் சாம்பலானாள்..
தொன்மைத் தமிழின் ஆலயம் மீதும்
வன்மம் தீர்த்தது சிங்களம்
மேகமே உனக்கும் இரக்கம் பிறக்கவில்லயே அன்று
கொஞ்சம் நீ அழுதிருந்தால்
வெந்தணல் அணைத்து எங்கள் செந்தமிழ் காத்திருப்பாய்..
அறிவுப்பசிதீர்த்த எங்கள் அறிவுச்சுரங்கம் கருகிப்போதல்கண்டு
தமிழ்மனமெலாம் உருக்கிப்போனதடா..
உயிரையே பறிகொடுத்த பரிதாபம் அது-தமிழ்
பயிரையே கருவறுக்க காமினிக்கு ஏனிந்த மோகினியாட்டம்?
இன்று நினைத்தாலும் வயிறு பற்றி எரிகிறதே?
தொண்ணூறாயிரம் நூலெரிந்து மண்ணாகிப்போக
சிங்களவன் மனம் கல்லாகிப்போனதே…
என்னடா செய்தது எங்கள் அறிவுக்கருவூலம் ?
பாசிச கிட்லரும் வீசிய குண்டை பக்குவமாய் வீசினான் மியூசியம் காத்து..
புத்தனின் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் இப்படி புத்திபேதலிதுப்போனது?
தமிழன் அடையாளம் அழிப்பதாய் நினைத்து
ஆசியாவின் அறிவுக்களஞ்சியத்தை அழித்துவிட்டாயே மூடனே
மனித குலத்தின் கடைவிந்தில் கருவான காடையனே-
புத்தனீன்ற மொத்த பௌத்தனும்
புத்தகத்தின்
புனிதமறியா பாமரர்களா..
பத்தவைத்து வேடிக்கை பார்க்க இது பட்டாசு அல்லடா..
எங்கள் அறிவுப்பசிதீர்த முட்டாசுடா..
உன் மதிகெட்ட செயல் கண்டு இவ்வுலகமே தன் மலவாயால் சிரிக்குதடா
மாபாவி..
மானம்கெட்டவனே எங்கள் கலைத்தாயை கருக்கித்தொலைத்தவனே..
உன்னை சாபமிடுகிறேன்..
என் கலைத்தாயே
இவர் மீதுள்ள கோபம்விடு
புத்தனீன்ற பிள்ளைகளுக்கு நல்ல புத்திகொடு..
வித்தை இவர் வித்துகளும் கற்றுணர சக்திகொடு..
இனவாத இரத்தம் கழுவி-நல்
மனதோடு வாழவழிவிடு..
சாபம் கேட்டுவிட்டு பாவம் பார்ப்பதாய் எண்ணிவிடாதே
இது உன்னிடம் கற்றுக்கொண்டது..
என் தாயிடம் கற்றுத் தேர்ந்தது..”
“ஆறாத வலியோடும் அறிவுப்பசியோடும்”
கவியாக்கம்:- ஈழப்பிரியன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”