மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு
மட்டு – அம்பாறை மண்ணும் மக்களும் மதிக்கின்ற உணர்வுமிக்க உண்மைத்துவமான அரசியல் பண்பாளன்.
கனிவான சிரிப்பும் ஆறுதலான வார்த்தைகளும் துன்பப்பட்டுவரும் எவரையும் மனம் நோகாமல் துயர் துடைத்து ஆற்றுப்படுத்தி விடும் தூய்மையான மனிதநேயன்
சிங்கள அரசின் குடியேற்ற ஆக்கிரமிப்பு எங்கள் வேலிக்கு எல்லையிட்டு எல்லைதேடி வந்தபோதெல்லாம் நீங்களே எங்கள் எல்லைக்கல்
உணர்வு மிக்க உங்கள் அரசியல் ஞானம் கண்டு அடக்க நினைத்த சிங்கள அரசு சிறைவாசம் ஆக்கியபோதும் உறுதியுடன் உள்ளிருந்து உரிமைத்துவ உணர்வையே வளர்த்துக்கொண்டீர்கள்
தமிழ் தேசிய விடுதலைப்போரின் வீச்சுக்கும் மக்கள் எழுச்சிக்கும் முன்னின்று உழைத்த உண்மைத்துவ உத்தமன்
போராளிகளும் மக்களும் வேறு அல்ல மக்களே போராளிகள் என்பதை உணர்த்தி நின்றது நீங்கள் சிந்திய குருதி உங்கள் அர்ப்பண வாழ்வும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தளத்தின் மக்கள் எழுச்சிக்குரிய மைல்கல் ………………..
மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து தன்னுயிர் ஈர்ந்த தங்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் வழங்கிய அதி உன்னத மதிப்பளிப்பு மாமனிதர் ………………..
போற்றுகின்றோம் தந்தையே வணங்கின்றோம் தந்தையே இன்றைய இந்நாளில்……..
நினைவுப்பகிர்வு:- தணிகைக்குயில்.
வெலிக்கந்தையில் லெப். கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு மாசி மாதம் 8ம் நாள் மரணமடைந்தார்.
இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.
இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.
எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.
சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.
இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”