செஞ்சோலை மலர்கள்…..
செஞ்சோலை மலர்கள்…..
செஞ்சோலை மலர்கள்
பிஞ்சு நெஞ்சங்கள்
பாஞ்சு வந்த
கிபிர்க் குரங்கின்
கைகளில் மாலையாகியதோ?
அப்பாப்பா….
நினைத்துப் பாராய் மனமே
மனத்துள் எல்லாம்
இரும்புக் குண்டாய் கனக்கிறதே
வெடிக்கும் கண்ணீரில்
இரத்த ஆறு
பொறுக்க முடியுமோ?
அவர் உடலங்கள் ஏதும்
இனி சகிக்கக் கூடுமோ?
மனசில் உந்தன் நினைவு
பழசான ஆணியாய்
குத்திக் குத்தி
வலி காட்டும்..
சோகப் புழுதி படர்ந்த
எம் முகத்தில் உன்
கிபிராட்டம் எளிதாய்
மறைந்திடுமோ
எம் இரத்தம் மேலே
பறந்தடித்து ஓர்
காவுச் சித்திரம்
நீ வரைந்தாய்
இரத்தம் இன்றி உன்
பரத்த சத்தம் இடும் ஊர்தி
எம் கணத்தில் இனியும்
வழைந்திடுமா…
துரத்தி துரத்தி பழி தீர்க்க
பல உணர்வின் குழாய்கள்
காத்துக் கிடக்குதிங்கே
உன் குண்டுப் பயிர்
விழைக்கும் கரம் ஒழிக்க
எம் சிறுதுணிக்கைகள்கூட
உன் சாவை குறி வைக்கும்
கண்ணுதிர்க்கும் மணிகள் எல்லாம்
விண்ணிருக்கும் மலர்களுக்கு
உடனிருந்து செப்பனிட நல்
நர்த்தனங்கள் ஆக வேண்டும்.
ஏனைய மாணவச்செல்வங்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம். …
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”