மாவீரன் ஆனந்தன்
இந்திய படை வெறியர்
உன் பிணத்தை
மாங்குளம் சந்தியில்
தொங்க விட்டார்கள்
அண்ணா !
கொலைகாரர்கள்
வெற்றி என்று
அதை நினைத்தார்களே
அங்கேதான் அவர்கள்
தோற்றார்கள்
பாஞ்சாலங் குறிச்சியில்
புளிய மரத்தில்
வெள்ளைக்காரன் தொங்கவிட்ட
கட்டபொம்மனுக்கும்
உனக்கும் என்ன வேறுபாடு.
அண்ணா
நேற்று வெள்ளையன்
தனக்கு செய்ததை
இந்தியா உனக்கு செய்தது.
முல்லைத்தீவு மாங்குளம் சந்தியில் அமைந்திருந்த மக்கள் தொண்டர் படைக்கும்பலின் முகாம் மீது 05.10.1989 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கப்டன் ஆனந்தன் அவர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நினைவாக……
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”