குடும்பத்தைத் துறந்து கல்வியைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக
குடும்பத்தைத் துறந்து கல்வியைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக தமது உயிரையும் துச்சமாக மதித்து, போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள். இவர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது சிங்கள அரச பயங்கரவாதமேயன்றி, வேறொன்றும் இல்லை. அநீதியான, அதர்மமான கொடுங்கோன்மை ஆட்சியை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சிறை, சித்திரவவதை, உயிர்வதையாகத் தம்மீது திணிக்கப்பட்ட கொடூரமான வாழ்வை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவேதான் அடிமைகளாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காகச் சாவதே மேல் என்ற புனித இலட்சியத்திற்காக இரத்தம் சிந்துகிறார்கள்; கண்ணீர் வடிக்கிறார்கள்; உயிரையும் அர்ப்பணித்துத் தியாக வீரர்களாக வீர வரலாறுகளைப் படைக்கின்றார்கள். ஆனால் இனவெறிபிடித்த சிங்கள அரசின் குருட்டுத்தனமான பார்வையில் இவர்கள் பயங்கரவாதிகள், வன்முறைவாதிகள், அராஜகவாதிகள்; இஅர்கலது உன்னதமான இலட்சியாவ் ஓயராட்டம் பயங்கரவாதம் பொதுமக்களாகிய உங்களுக்கு உண்மை நிலைமை நன்கு தெரியும். உங்கள் குழந்தைகள் மீது குத்தப்படும் அரசியல் முத்திரைகள் அர்த்தமற்றது. அநியாயமானது என்பதும், உங்களுக்குத் தெரியும்.
நாம் தர்மத்திற்காக, தன்மானத்திற்காக ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். எமது இலட்சியப் பயணமும் அதற்காக நாம் புரிந்துவரும் உன்னத தியாகங்களும் உங்களுக்குப் புரியும். ஆதலால் நீங்கள் எம்மை அரவணைத்துக் கொள்கிறீர்கள். ஆதரவு அளிக்கிறீர்கள். நாம் மக்கள் சமுத்திரத்தில் சங்கமமாகியுள்ளோம். இதனால் பொதுமக்களாகிய உங்களிடமிருந்து எம்மை பிரித்து வைக்கும், தந்திரோபாயங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. இதனால் விரக்தியுற்று ஆத்திரங்கொண்ட சிங்கள இனவாத அரசு, வெகுசனம் மீது போர் தொடுத்திருக்கின்றது. ஆயுத பலாத்கார அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டுருக்கின்றது. உங்களது பிள்ளைகளை நீங்கள் காட்டிக் கொடுக்கவில்லை என்பதற்காக, உங்களைத் தாங்கொணாத் துன்பத்தின் எல்லைக்குத் தள்ளி, உங்கள் மீது பழிதீர்த்துக் கொள்ள முனைகிறது. எமது சுதந்திரப் போராட்டம் நீண்ட துன்பகரமான வரலாற்றைக் கொண்டது.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”