விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், முழுச் சமுதாயமுமே பேரழிவை நோக்கிய இச் சூழ்நிலையில், எம்மத்தியில் சுயநல உணர்வுகள் களையப்பெற்று சமூக உணர்வு பிறக்கவேண்டும். பம்னத்தை முடக்காமல், உணவுப் பண்டங்களை பதுக்காமல், தான் வாழ்ந்தால் போதும் என்ற தன்னலம் கருதாமல் வசதி படைத்தோர் வசதியற்றோருக்கு உதவ வேண்டும். பணம் படைத்தோர் பட்டாணி கிடப்பவர்களுக்கு உதவ வேண்டும். இது ஒரு தேசிய நெருக்கடி. இந்த நெருக்கடியில் பிறக்கும் துன்பத்தை முழுத் தேசிய இனமுமே பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தத் தேசியச் சுமையைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்கு செய்யும் துரோகம் என்றே சொல்லவேண்டும். நாம் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைக் கட்டியெழுப்பி வருகிறோம். ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல், ஆயுதம் தரித்தல், கெரில்லாப் படையணிகtளைப் பராமரித்தல் போன்ற எமது பாரிய போர்த்திட்டத்திற்கு பெருமளவில் நீதி அவசியம் என்பதை நாம் விளங்கத்தேவையில்லை. இந்த நோக்கில்தான் தேசிய பாதுகாப்பு நிதித் திட்டமொன்றை நாம் உருவாக்கினோம். இந் நிதி தமிழீழத்திலும், வெளிநாடுகளிலும் திரட்டப்படும். இந்நிதிக்கு குறிப்பாக வெளிநாடுகளில் வதியும் தமிழீழத் தேசாபிமானிகள் தம்மாலான உதவியைச் செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். உறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: தமிழீழம் என்றோ ஒருநாள் உதயமாவது திண்ணம். எமது மக்களாகிய நீங்கள் விடிவு பெறுவது திண்ணம். சமதர்ம சமூகமாக எமது நாடு வழங் கொளிப்பது திண்ணம். இந்த நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையை நோக்கி வீறுநடை போடுவோமாக.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
1984ம் ஆண்டு தமிழீழ மக்களுக்கு விடுத்த அறிக்கையிலிருந்து….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”