பிறிஸ்பேன் தமிழ் அன்னை துயருகிறாள்
மின்னல் முழக்கம் எதுவும் இன்றி
விடிகாலை எம் தொலைபேசி தொனிக்க
காதோரம் கேட்ட துயராறாச் செய்தி
பேரிடிபோல் எம்மை வாட்டியதே
தமிழீழ வண்ணார் பண்ணையை பிறப்பிடமாயும்
அவுஸ்நாட்டின் மெல்பேர்ன் நகரை வதிவிடமாயும்
அன்புத் துணைவியுடனும் ஆசை மகனுடனும்
கால் நூற்றாண்டு காலம் களிப்புடன் வாழ்ந்தீரே
உண்ணாமல் உறங்காமல் தமிழீழ உறவுகளின்
உணர்வுகள் உரிமைகள் உயர்வுற உழைத்துள்ளீர்
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா நாடுகளில்
தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்துள்ளீர்
தமிழீழம் விடுதலையாகும் தாகத்தை நெஞ்சிலிருத்தி
பங்காரு அன்னையின் ஆன்மீக அருள்வேண்டி
கங்காரு தேசத்தின் மாவட்டங்கள் அனைத்திலும்
இளைஞர் குழுக்களை சாதுர்யமாய் ஆரம்பித்தீர்
ஈழ அன்னை ஈன்றெடுத்த ஈகைமன நிறைவுடையான்
புன்முறுவல் பூத்தமுகம், மனிதநேய அன்புடையான்
காலம் செய்த கோலத்தால் இறைவனடி சென்றீரே
நீர் புரிந்த தார்மீகக் கடமைகளை நாம் செய்வோம்
தமிழர் மனங்கள் பிளவுற்ற வேளையில்
சமாதானப் புறாவாக பறந்து இணைத்தீரே
வான்புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலின்
மகிழ்ச்சிப் பெருவாகத்தில் வானகம் சென்றீரோ
போய் வருகிறேன் எனக் கூறாமல் போய் விட்டீர்
தமிழீழ மக்கள் உம்பிரிவால் ஏங்கித் தவிக்கிறார்கள்
தமிழீழத் தேசியத் தலைவரும் உமது சேவைக்காக
மாமனிதர் பட்டம் சூட்டி பாராட்டியுள்ளார்.
தமிழீழம் பிறப்பதற்கு தணியாத தாகம் கொண்டாய்
தாகம் தணிவதற்கு காலம் நெருங்கிவிட்டது
ஜெயம், ஜெயம் ஜெயக்குமாரா ஜெயம் ஜெயம்
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி எனப் பாடுவோம்.
மாமனிதர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்கட்கு பிறிஸ்பேன் மாநகரிலிருந்து வரும் கண்ணீர் அஞ்சலி….
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”