எம்.ரி.கொய் கப்பலில் காவியமான போராளிகள் வீரவணக்க நாள்
விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலில் காவியமான போராளிகள் வீரவணக்க நாள் நாள் இன்றாகும்.
சர்வதேசக் கடற்பரப்பில் 10.03.2003 அன்று விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’ லெப்.கேணல் சிலம்பரசன், கடற்கரும்புலி மேஜர் சாருமதி உட்பட 12 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வருகின்றன “வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடிக்கின்றனர்.
உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் முலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்கமுடியாத பெரும் தீயாக முளாசி எரிகின்றது.
அசையாத மனவுறுதியும், அள்லாடாத வழித்தெளிவும் கொண்ட எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் கடற்புலிகள் ஆற்றிய சாதனைகள் கால வரலாறாக விளங்கும்.
எம்.ரி.கொய் கப்பலில் உலகெங்கும் கடலோடி – ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள்…..
கப்பல் கப்டன் – கடற்கரும்புலி சிலம்பரசன் (ரஞ்சன்)
சீவ் எஞ்சினியர் அம்பிகைவாணன்
2ம் ஒவிசர் சுடர்ணன்
3ம் ஒவிசர் மேகன்
2ம் எஞ்சினியர் தணிகைமாறன்
3ம் எஞ்சினியர் அமுதன்
போஸன் நவநீதன் (சிந்து)
ஏபிள் சீமன் எழில்கண்ணன்
ஏபிள் சீமன் இளம்பருதி
கடேற் தூயவன்
சீவ் ஒவிசர் இரும்பொறை
இவர்களுடன்……….
சர்வதேசக் கடற்பரப்பில் 10.03.2003 அன்று விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய அதனை மூழ்கடித்து வீரகாவியமான….
இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”