இயற்கை அழிவிலும் இனவாதச் சிந்தனை
தமிழ் – சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடின்றி கரையோரங்களில் வசித்த அனைவரையும் கடற்கோள் தாக்கி அழித்தபோது மக்கள் இன உணர்வு கடந்து மனிதாபிமானத்துடன் செயற்பட்டார்கள்.
தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் மக்களைக் காப்பாற்றி கரைசேர்ப்பித்ததும் முஸ்லிம் மக்கள் தமிழ்மக்களைப் பாதுகாத்து புகலிடம் வழங்கியதையும் சிங்கள மக்கள் தமிழர்களுக்கு உணவுப்பொதிகள் கொடுத்து உதவுயதும்….. (2004ம் ஆண்டில் காலத்தில்…) என்று அந்தச் சிலநாட்கள் தீவின் இன அரசியலுக்கு முரணாகவே கழிந்தன.
இந்த இயற்கை அனர்த்தம் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான மனநிலையிலும் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று அரசியல் அவதானிகள் எதிர்பார்த்தனர்.
சுனாமி| அழிவுக்கான புனருத்தான வேலைகளையும் – சமாதான முயற்சிகளையும் ஒன்றாக முன்னெடுத்து வெற்றிகாண முடியும்
என்றும் சர்வதேச இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டனர்.
சுனாமி அழிவுகளைப் பார்வையிடுவதுடன், சமாதான முயற்சிகளையும் வலுப்படுத்தும் எண்ணத்துடன் மேற்குநாடுகளின் தலைவர்கள் இலங்கை நோக்கி அரசியற் பயணங்கள் மேற்கொண்டனர்.
எனினும், அனைத்துத் தரப்பினரும் நம்பியதுபோல அரசியல்நகர, சந்திரிகா அம்மையார் இடங்கொடுக்கவில்லை.
இயற்கை அழிவைச் சமாதான முயற்சிகளுடன் எல்லோரும் இணைத்துப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்க, அம்மையாரோ இனவாதரீதியிலும் – போர் முனைப்பிலும் செயற்பட ஆரம்பித்தார். உடனடி மீட்பு நடவடிக்கைகளில் புலிகள் இயக்கம் திறம்பட நடாத்திவருகின்றது என்பதை அறிந்திருந்தும் புலிகள்மீது சேறுபூசும் வகையில் குற்றச்சாட்டுக்களை வீசிவந்தார்.
உலகநாடுகள் உவந்தளித்த நிவாரண உதவிகளை சிங்களவர் – தமிழர் என்று இனபேதம் காட்டி விநியோகிக்க ஏற்பாடுகள் செய்தார்.
கிழக்கு மாகாணத் தமிழ்மக்களுக்கெனச் சென்ற நிவாரணப் பொருட்களை படையினரும், ஜே.வி.பியினரும் வழிமறித்து சிங்களவர்களுக்கெனத் திசைதிருப்பியபோது அம்மையாரின் அரசு அவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததுடன் – அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை என்று நியாயப்படுத்தல்களிலும் ஈடுபட்டது.
இயற்கையின் சீற்றத்தில் இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்தபோது நிவாரண உதவிகளின் அதிகரித்த பங்கை தெற்கிற்கு அனுப்புவதிலேயே அம்மையார் குறியாக இருந்தார். தெற்கிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்களவருக்கே உதவிகள் அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டன.
புனர்நிர்மாணத்திற்கான திட்டங்களை வெளிநாட்டு அரசுகள் கோரியபோது தமிழர் பகுதிகளை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு சிங்களவர் பகுதிகளுக்கான திட்டங்களை உடனடியாகத் தயாரித்து, சந்திரிகா அரசு அனுப்பிவைத்தது. இலங்கை ஒருநாடு என்று இறைமைத் தத்துவம் பேசும் அம்மையார் தமிழ், முஸ்லிம் மக்களைப் புறக்கணித்துவிட்டு சிங்களவரின் தலைவியாகவே நடந்துகொண்டார்.
கடற்கோள் அழிவை ஒரு தேசியப் பேரழிவு என அறிவித்து உலக உதவி கோரிய அதேசமயம் நாட்டில் அவசரகால நிலையைப் பிறப்பித்தது வடககு, கிழக்கில் தனது இராணுவ நலன்களை உறுதி செய்வதில் அம்மையார் அக்கறை காடடினாரேயொழிய, வடககு, கிழககு மக்களின் மீட்பு மற்றும் நிவாரண விடயங்களில் அக்கறை காட்டவில்லை.
இலங்கைத்தீவில் அதிகம் பாதிப்படைந்த வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திற்கு உலகத் தலைவர்கள் வந்துவிடாதபடி பார்த்து கொள்வதில் சந்திரிக்கா அரசு, ஒரு கேவலமான இனவெறியுடன் நடந்து கொண்டது. ‘தனது மக்கள்’ என்று வடக்கு கிழக்கு மக்களை உலக நாடுகளுககுச் சொல்லிவந்த அம்மையார் இந்த அவலநேரத்திலும் இனவெறி உணர்வுடன் செயற்படுவது கண்டு உலகத் தலைவர்கள் திகைத்துப் போயினர்.
ஒரு பேரழிவில் இலங்கை மக்கள் அல்லல்பட்ட வேளையில் அந்த மக்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு, பெருமெடுப்பில் ஆயுதக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்களை வரைவதிலேயே அம்மையாரின் அரசு குறியாக இருந்தது.
ஈரானுடன் ஒரு ஆயுத ஒப்பந்தம். உலகநாடுகளுடன் யுத்த டாங்கிகள் வாஙகும் உடன்படிக்கை. பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்… என்று சிங்கள அரசு போர் முனைப்புடனேயே செயலாற்றி வருகின்றது.
வந்து குவியும் வெளிநாடுகளின் மனிதாபிமான உதவிக்கான பணத்தை சிங்கள அரசு ஆயுதக் கொள்வனவுகளுக்கு பயன்படுத்த முனைகின்றது என்ற அச்சம் தமிழ்மக்களிடம் எழுந்துள்ளது.
சந்திரிகா அம்மையாரின் சமாதான விரோதச் செயற்பாட்டால் முன்னர் வரவிருந்த ‘டோக்கியோ நிதி’ அரசிற்குக் கிடைக்கவில்லை. அதனால் இலங்கையின் அரச பொருளாதாரம் பாரிய நெருக்கடி நிலையில் இருந்தது. ஆனால் இப்போது திடீரென சிங்கள அரசு ஆயுதக்கொள்வனவில் – கப்பல் கொள்வனவில் – விமானக் கொள்வனவுகளில் அக்கறைகாட்டுகின்றது. இதற்கான நிதிவளம் சிங்கள அரசுக்கு எவ்வாறு கிடைத்துள்ளது என்பது உலகறிந்த விடயமாகும்.
இந்தவகையில், இயற்கை அழிவுகளைக்கண்டு உலகம் வழங்கிய உதவிகளை சிங்கள அரசு ஆயுதக் கொள்வனவிற்கும் – தென்பகுதி அபிவிருத்திக்குமே செலவிட்டு வருகின்றது என்ற உண்மை வெளியாகின்றது.
தமிழர் பகுதிகளுக்கான வெளிநாட்டு உதவிகளின் பங்கு சரியாகக் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும், கிடைக்கும் நிதி உரிய இடங்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற கொள்கையுட னும் சிஙகள அரசும் – புலிகள் இயக்கமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பு அமைய வேண்டும் என்று புலிகள் இயக்கம் அரசைக் கோரியிருந்தது.
ஆனால், பொதுக் கட்டமைப்பு யோசனையை சிஙகள அரசு புறக்கணித்து வருகின்றது. அதற்குப் பதிலாக ஊழலும் – இனவெறி உணர்வும் – நிர்வாகத்திறன் அற்றதுமான சிங்கள நிர்வாக இயந்திரத்தினூடாகவே வடக்கு – கிழக்கு பகுதிகளிலும் வெளிநாட்டு உதவிகள் செலவிடப்படும் என்று அரசு பிடிவாதம் பிடிக்கின்றது.
இந்த இயற்கை அழிவுகளைப் பயன்படுத்தி சமாதான முயற்சிகளை வேகப்படுத்த வேணடும் என்ற உலக நாடுகளின் விருப்பத்திற்கு முற்றிலும் மாறாக ஒரு போரைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளிலேயே சந்திரிக்கா அரசு ஈடுபடுகின்றது.
சுனாமி அழிவுகள் குறித்த மனிதாபிமான வேலைத்திட்டங்கள் தொடர்பாக தலைமைப்பீடத்துடன் ஆலோசனை கலந்துவிட்டு மட்டக்களப்பு திரும்பிய புலிகளின் அணி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்து – தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப் கேணல் கௌசல்யன் உட்பட நான்கு போராளிகள் கொல்லப்பட்டனர். இது மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிச் செயல் என்பதுடன், புலிகள் இயக்கத்தைச் சீண்டி போருக்கிழுக்கும் ஒரு இராணுவச் செயலுமாகும்.
இவ்விதம், சமாதான முயறச்சிகளுக்குப் பதிலாக சந்திரிக்கா அரசு போர் முனைப்பிலேயே காலத்தை ஓட்டுகின்றது. அதற்கு வாய்ப்பாக சுனாமி அழிவுக்கான வெளிநாட்டு உதவிகளை இராணுவத் தேவைக்கு திசைதிருபப் முயற்சிக்கின்றது. அதேசமயம், புனர்வாழ்வு மற்றும் நிவாரண விடயங்களிலும் தமிழர்களைப் புறக்கணித்து வஞ்சிக்க சிங்கள அரசு முனைகின்றது.
சிங்கள அரசின் இந்த இனவாத – இராணுவவாத செயற்பாட்டை சர்வதேச சமூகம் உணர்ந்துகொண்டு கொண்டு அதற்கேற்ற விதமாகச் செயற்பட வேண்டும் என்பதே தமிழரின் அவாவாகும்.
விடுதலைப்புலிகள் (மார்கழி 2004 – தை, 2005) இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”