இனிவரும் நூற்றாண்டிலும் இனிது வாழ்கவே…..
வெற்றியலை தேசமெங்கும் ஆர்ப்பரித்து மூசுது
வேலுப்பிள்ளைபிரபகரன் பேரினையே கூறுது
பெற்றெடுத்து எமக்களித்த வல்வை மண்ணுமே
பெருமையோடு பொங்கியெழுந்து சிரிக்குது
நற்றமிழில் சொல்லெடுத்து நம் தலைவரை
நானுமிங்கே பாடிடவே துடிக்கிறேன்
வற்றிடாது ஊற்றெடுக்கும் வார்த்தை தேடியே
வானளாவ சுற்றிவந்து தவிதவிக்கின்றேன்.
நாட்டிலுள்ள கலைஞரெல்லாம் ஒன்றுகூடுங்கள்
நம் தலைவர் மீதவொரு பரணி பாடுங்கள்
எட்டிநடை போடுகின்ற வெற்றி நாளிலே
எம் தலைவர் ஐம்பத்தி எட்டாவது அகவை நிறையுமே
கொட்டிடவே கைகளிலே முரசு ஏந்துங்கள்
கொம்பெடுத்து நாள் முழுவதும் ஊத்தி மகிழுங்கள்
தட்டினிலே மலரேந்தி வாழ்த்திப் பாடுங்கள்
தமிழீழம் கானவிங்கே எழுந்து வாருங்கள்.
அன்னைத் தமிழே ! அழகுக் கவியே !
அருஞ்செயல் படைத்திடும் திருமலர்த்தேனே
திங்கள் ஒளியே ! தன்மைச் சுனையே !
தங்கமண் தந்த தவத்தின் கொழுந்தே
பொங்கிடும் கடலே ! புலரும் பொழுதே !
போரினை வென்றிடும் விடுதலை விறலே
எங்கள் தலைவனே ! இன்னருள் தேவனே !
இனிவரும் நூற்றாண்டிலும் இனிது வாழ்கவே.
– ஆ.ந.பொற்கோ.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”