தமிழன் ஆண்டு 60
வல்வையில் பிறந்து
வல்லரசுகளை உலக அரங்கிலிருந்து
தாய் மண்ணுக்கு குவிய வைத்தவன்.
காலத்திற்கு சிறிது காலம்
பொறுக்கச் சொன்னவன்.
தன் மௌனத்தையே
உலக வல்லரசுக்கு
மௌனப்பாடம் நடத்தியவன்.
வல்வையின் வலம்புரிச்சங்கு
வல்லரசுக்கு வலம்புரிப் போராளி.
வாழ்வுக்கும் வாழ்கைக்கும்
போராட்டத்துக்கும்
அகராதியை திருக்குறள் போல்
சுருக்கமாகச் சொல்லி
வாழ்ந்து காட்டியவன்.
முச்சங்கம் மூவேந்தர் மூத்த தமிழன்
வழி வந்த வரலாற்றுப் பெருமைகளை
ஈழ மண்ணில் இருபதாம்
இருபத்தி;யொன்றாம் நு}ற்றாண்டில்
ஓயாத அலைகள் என்றும்
புதிய புதிய புலிப்படைப் பிரிவுகளென்றும்
சரித்திரமாக பதிந்தவன்.
உலகத் தமிழினம் தமிழனாக
வாழும் வரை
நீ அவதரித்த ஆண்டு முதல்
தமிழன் ஆண்டென்று வாழ்ந்து விடுவோம்.
வல்வையூர் நெய்தல் நில மண்ணில்
கேற்றப்போலும் புளியங்கொட்டையுமாக
நடந்த உன்பாதம்
எல்லாளன் ஆண்ட மண்ணில்
நீ கரிகாலனாக பாதம் பட்ட
ஈழபூமியில் சிவந்த மண்ணில்
இன்னும் உன் அத்தனை அவதாரங்களும்
பிறப்பெடுப்பார்கள்.
காலச்சக்கரச் சுழற்சியில்
புதிய நாடுகளின் வரிசையில்
உன் எங்கள் ஆத்மா நேசித்த
தமிழிழம் மலர்ந்திருக்கும்.
உலக வல்லரசார்களும்
கௌரமாக உன் பிறந்தநாள்
கொண்டாட தமிழிழம் வருவார்கள்
இவ்வாண்டு தமிழ் 60.
– வல்வை மாமாச்சி.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”