நிமிர்வு தந்தவனின் அகவை நிறைவில் உவகையுடன்…!
பிரபாகரன்..!
தமிழ் வானின் கதிரானவன்!
தமிழ் வாழ்வின் உயிரானவன்!
மூச்சினில் சுமக்கிறான்
தமிழின விடுதலை
விரைவினில் ஆக்குவான்
விடியலின் அறுவடை
விடுதலைத் தீயானவன்
தமிழரின் தாயானவன்
குழந்தை வடிவமே
அவன் சிரிப்பு!
வுpழிகள்..
பகையெரிக்கும் அனல் நெருப்பு
அடிமை விலங்குகள்
உடைத்தவன்
புதுமைக் காலங்கள்
படைத்தவன்
சமூக அழுக்குகள்
போக்கியவன்
பகுத்தறிவின் பாதை
உருவாக்கியவன்
சாதிச் சாக்கடை
கொழுத்தியவன்
சரிநிகர் நீதிச் சாதனை
நிகழ்த்தியவன்
செஞ்சோலையில்
சேய்களைத் தாங்குகின்றான்
அறிவுச்சோலையில்
தாயாகி தாலாட்டுகின்றான்
பகைவர் படைகளை
ஓட்டியவன்
தமிழர் படையின் பலமது
நாட்டியவன்
வலிமையே வாழ்வென்று
காட்டியவன்
உலகத்தமிழரை ஓரணி
கூட்டியவன்
போராற்றல் மட்டுமா
கைவரப்பெற்றான்
நுண்மதித் திறனில்
பேராற்றல் பெற்றான்
மானிடம் காக்க
மலர்ந்த கதிரவன்
தமிழர் இதயம்
நிறைந்த உயிரவன்
நிமிர்வு தந்தவனின்
அகவை நிறைவில்
உவகையுடன்
உணர்வள்ளி வாழ்த்துவோம்…!
– தமிழ்வாணன் (நோர்வே)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”