எழுவானில் சூரியன்கள்….
பூங்காற்றும்
பறைசாற்றும்
போர் வீரர் உம்முகத்தில்
தீர்மானத் தெளிவிருக்கும்.
உங்கள் உறவுகளை
கண் நிறை கனவுகளை
தங்க மணி மண்ணுக்காய்
தனைப் பரிந்து போர்செய்து
எங்களோடு ஒன்றாகி
எம்முள் இருந்தவரே !
எங்களுக்காய் உயிர் கொடுத்து
எதிரியை வென்றவரே
மங்காப் புகழுடன் மாண்டீர்
தங்காப் பகையாய்
தரை சாய்த்தீர்
ஏங்கி நிற்கிறோம்
எனினும் உம் நினைவை
தாங்கி நடக்கிறோம்
எம்மக்கள் எண்ணமதில்
எழும் சூரியனானவரே
உம கனவு நனவாகும்
ஒரு காலம் விடிவுபெறும்.
– கு.வீரா
(1999ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”