கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்
காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும்
கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம்
கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள்
கைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரே
கார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள்
ஈழம்மலரும் வேளையிலே – தம்
இதயதாகம் தீர்ந்ததென
ஈழத்தாயினை வாழ்த்திடவே
கல்லறையில் கண்விழித்துக் காத்திருக்கும்
எம்காவல் தெய்வங்களை போற்றிடவே வாருங்கள்
போற்றியே போற்றியே தீபம் ஏற்றிட வாருங்கள்.
ஏற்றிவைக்கும் தீபத்தின் ஒளியாய் நின்று
எம்மினத்தின் இருளகற்றி ஓளியேற்ற வேண்டி
போற்றிடவே வாருங்கள் கண்ணீர்ப்பூக்கள் தூவி
கரம் கூப்பிட வாருங்கள் – கரம் கூப்பிட வாருங்கள்
கல்லறைத் தெய்வங்களின் புனிதம் போற்றி -அதை
காணும் எம் மனங்களிலே மனிதம் ஏற்று
அல்லல்கள் அவலங்கள் அனைத்தும் வெல்ல
அகிலத்தில் வாழும் தமிழர்களே அன்பால் இணைந்து
ஒன்றுகூடியே வாருங்கள் கை ஒன்று சேரவே வாருங்கள்.
கவிதை : ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”