கடற்கரும்புலி லெப். கேணல் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
சிறிலங்கா படைகளுடன் கடலிலும் – தரையிலும் வெவ்வேறு கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் வளவன், கரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்புலி கப்டன் வீமன் / அன்பிற்கினியன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய்மண்ணின் விடுதலைத் தாகத்துடன் புயலான புயல்கள்…..
மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய கரும்புலி மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருமலை மாவட்டம் பள்ளித்தோட்டம் பகுதியில் 15.10.2001 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அன்பிற்கினியன் / வீமன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை 15.10.2006 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் வளவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி 2ம் லெப். அன்புக்கொடி ஆகிய கடற்கரும்புலி மாவீரனின் வீரவணக்க நாளும் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”