நெஞ்சில் சுடரும் நினைவுகள்
|| நெஞ்சில் சுடரும் நினைவுகள்…
நாற் சுவரே உலகமென
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்பிக்கச் செய்தவளே.
பாரம் சுமக்கவல்ல
படைத்தது. பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி.
“ஈழம்” தவிர்ந்தெந்த
இன்பமும் யாம்
வேண்டாமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்,
பூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே – நீ
காட்டிச் சென்ற தெவ்வழி
கடைசி வரை நாமும் அவ்வழி!
– சூரியப்புதல்வர்கள் 2003 லிருந்து ….
|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||