2ம் லெப். மாலதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை ரஞ்சினி ஆகிய மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுட்சி நாளும் இன்றாகும்.
2ம் லெப். மாலதி 28 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.
அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது.
1987 ஐப்பசி 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.
நீளும் நினைவுகள்……..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”