கடற்கரும்புலி மேஜர் குமரவேல் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி மேஜர் குமரவேல் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 01.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் ரோந்து நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்கு சென்றவேளை தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மக்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்டு, மக்கக்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமரவேல் / மதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய்மண்ணின் விடியலிற்காக கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”