லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் 23.07.1983 அன்று சிறிலங்கா படையினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கெரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். செல்லக்கிளி அம்மான் ஆகிய மாவீரரின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைசிறந்த கெரில்லா தளபதியான லெப்டினன்ட் செல்லக்கிளி 1983 ஆடி மாதம் 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இத்தாக்குதலில் 13 சிங்க இராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.
திருநெல்வேலித் தாக்குதல் உட்பட பல கெரில்லா அதிரடித் தாக்குதல்களுக்கும் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்த செல்லக்கிளி அம்மான் யாழ்ப்பனத்திலுள்ள கல்வியங்காட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இளம்பிராயத்திலேயே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட செல்லக்கிளி விடுதலைப்பற்று மிகுந்த ஒரு வீரமறவன். இவரது தன்னலமற்ற உழைப்பும், தியாகமும் என்றும் எமது மக்களால் நினைவுறுத்தப்படும்.
|| இலட்சிய உறுதியை விதைத்து தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் கல்லறையில் உறங்கும் மாவீரம்…..
நீளும் நினைவுகளாகி…..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”