கடற்கரும்புலி மேஜர் தங்கம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்ட காங்கேசன்துறை துறைமுகத்தினுள் 16.07.1995 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பல் “எடித்தார” மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் / நியூட்டன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி மற்றும் கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப். கேணல் நரேஸ் / சந்திரன், கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி லெப். கேணல் மாதவி ஏனைய மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்புலிகளின் மூன்று படையணிகள் உள்ளடக்கிய அணி காங்கேசன்துறை துறைமுகத்தினுள் அதிகாலை 1.00 மணிக்கு ஊடுருவி குடா நாட்டுப் படைகளுக்கு ஆயுத தளபாடம் விநியோக மையமாக இருந்த காங்கேசன்துறை கடற்படை தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சிறிலங்கா அரசுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தி வரலாற்று சரித்திர களமாகியது அன்றைய சமர்.
ஐந்து மணி நேர கடும் சமரில் கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர்.
பூநகரிச் சமரின்போது நாகதேவன்துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் மூழ்கிப்போனதால் கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப். கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி லெப். கேணல் மாதவி உட்பட 11 கடற்புலிப் போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
|| வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் மாவீரங்கள்…………
கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா)
கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ் (சந்திரன்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை)
கடற்புலிகளின் மகளீர் சிறப்புத் தளபதி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு திருச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு)
கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”