லெப். கேணல் நிரோஜன், லெப். கேணல் அக்பர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
சிறிலங்கா படைகளுடன் கடலிலும் – தரையிலும் வெவ்வேறு கள சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் மற்றும் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் அக்பர் / வழுதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய் மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்……
மன்னார் கடற்பரப்பில் 07.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் உட்பட ஏனைய (15) மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் (பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் – புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)
மேஜர் காமினி (ஜெயராஜ்) குப்புசாமி அருணாசலம் – கதிரவெளி, மட்டக்களப்பு)
மேஜர் நகுலன் (சண்முகலிங்கம் லோகேஸ்வரன் – மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்)
மேஜர் குகன் (செல்லையா) (யோசப் நியூட்டன் – நானாட்டான், மன்னார்)
மேஜர் சோழன் (சேவியர் யோசப்பற்றிக் – சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்)
கப்டன் இளநிலவன் (டேவிற் அன்ரன் அருள்தாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாகமணி (கோபால் முருகவேல் – தென்னியங்குளம், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் பாவேந்தன் (இராசதுரை ஜோன்கலின் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சொற்கோ (இராமலிங்கம் ரவி – முருங்கன்பிட்டி, மன்னார்)
லெப்டினன்ட் தமிழ்நம்பி (அருள்யோகநாதன் சுரேஸ்குமார் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மாறன் (கிருபாகரன் றமணன் – கரணவாய், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைவாணன் (பொன்னுத்துரை தவசீலன் – மாங்குளம், முல்லைத்தீவு)
வீரவேங்கை முதல்வன் (சிவபாலசுந்தரம் விஜயராஜ் – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை செம்பியன் (முத்துக்கறுப்பன் நிமலேந்திரன் – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இனியவன் (இராசரத்தினம் சசிராஜ் – சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்)
வடபோர் முனையில் யாழ். மாவட்டம் முகமாலையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் அக்பர் / வழுதி அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
போரியலுக்கு பலம் சேர்க்கும் வகையில் விநியோக நடவடிக்கையின்போது 07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் “எம்.வி.மக்சுமா” கப்பல் சிறிலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் கபிலன், கடற்புலி லெப். கேணல் அன்னாமறவன் உட்பட ஏனைய மாவீரர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகள்……..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”