லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்
கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரர் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 16.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் கப்பல் தொடரணி மீதான தாக்குதலிலும் மற்றும் இரு டோறா பீரங்கிக் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கலங்களை சேதமாக்கிய சமரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அனோஜன், கடற்கரும்புலி மேஜர் அருணா, கடற்கரும்புலி மேஜர் நித்தியா, கடற்கரும்புலி மேஜர் காந்தி இவர்களுடன் “கடற்புலிகளின் துணைத் தளபதி” லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப். கேணல் குமுதன் உட்பட ஏனைய (10) மாவீரர்கள் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் கடற்படையினருக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்தினர்.
பதினைந்துக்கும்அதிகமான டோறா பீரங்கிப் படகுகளுடன் சுமார் எட்டு மணிநேரம் கடுமையாக சமரிட்டு அவற்றில் இரண்டை மூழ்கடித்து மேலும் இரண்டை கடுமையாகச் சேதப்படுத்தினர்.
இந்தத் தாக்குதலில் கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் மற்றும் நான்கு கடற்கரும்புலிகள் உட்பட 10 மாவீரர்கள் வரலாறாகிப் போக்கினர்.
|| வெற்றிக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…..
இவர்களுடன் வெற்றிக்கு வித்து கடலிலே காவியம் படைத்தவர்கள்……
காவிய நாயகர்களின் நீளும் நினைவுகளாகி…………..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”