வீரவேங்கை கோவேந்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
“சூரியக்கதிர் 01” படை நடவடிக்கையில் மற்றும் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை கோவேந்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “சூரியக்கதிர் 01” படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 31.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை கோவேந்தன் / ரங்கராஜ் ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் வடமராட்சிக் கோட்ட கப்பூது பகுதியில் 31.10.1997 அன்று கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் நெடுங்கீரன் ஆகிய மாவீரரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை மாவட்டம் உப்பாறுப் பகுதியில் 31.10.2000 அன்று சிறிலங்கா வான்படையின் “மிக 27” வானூர்த்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் மன்மதன் ஆகிய மாவீரரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”