கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழத்தின் “இதயபூமி” மணலாற்றுப் (மாவட்டம்) பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகிய கரும்புலி மாவீரனின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய் மண்ணின் தாகத்துடன் வெற்றிக்கு வித்திட்டு புயலாக வீசிய தேசத்தின் புயல் எனும் வீரம்……….
நீளும் நினைவுகள்……………..
முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் பௌத்திரன் ஆகிய மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பன்னங்கண்டு பாலத்தில் அமைந்திருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் தாக்குதலின் போது 29.10.2000 அன்று தீரமுடன் களமாடி தாய்மன்னி விடியலில் கலந்த கப்டன் மிருணன் / ரூபராஜ் ஆகிய மாவீரரின் 15ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் முகமாலைப் பகுதியில் 11.10.2006 அன்று சிறிலங்கா இராணுவத்துடனான முறியடிப்புச் சமரில் விழுப்புண் அடைந்து 29.10.2006 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தாமரைச்செல்வி ஆகிய மாவீரரின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”