மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்
கலைஞானி அ.செல்வரத்தினம் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர்.
இப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர்.
1933 ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் முதலில் மகாதேவா வித்தியாசாலையிலும் பின் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கல்வி கற்றவர். 1947இல் தனது வீட்டு வளவில் கண்டெடுத்த 3 பழைய நாணயங்களையும் சங்கு ஒண்றையும் யூனியன் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியதாகவும் அதற்குக்கிடைத்த அதிபரின்பாராட்டும் பரிசாக வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கமுமே இப்பணியில் தன்னை ஈடுபடத்தூண்டியதாகவும் கூறுகின்றார்.
வேறு எந்த நிறுவனமோ தனிமனிதனோ செய்யாத, செய்யத்துணியாத இவ் வேலையை, தமிழரின் வரலாற்றுப் பொக்கிசங்களைத் தேடிப்பாதுகாக்கும் பணியைத் தள்ளாத வயதிலும் தனியே நின்று கலைஞானி செய்துவந்தார்.பண்டய நாணயங்களை , கலைப்பொருட்கள், தொல்பொருட்கள், பழைய ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் (பிரதிகள்) என்பவற்றை எல்லாம் தன் ஆற்றலுக்கு மீறிய வகையில் பேணிப்பாதுகாத்து வந்தவர்.
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழர் மாநாட்டின் போது சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் கலைஞானியின் அரும்பொருட் கண்காட்சி அனைவரையும் வியக்கவைத்தது. இலங்கயில் வேறு எந்த நூதனசாலையிலும் இல்லாத பொருட்கள் அவரிடமிருந்தன.1975 இல் குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழாவின் கண்காட்சியில் இவரது அரும்பொருட்களும் இடம் பெற்று ஊரவர்களை அதிசயிக்கவைத்தன. 1991 இல் யாழ்.பல்கலைக்கழகத்தில் இவரது மாபெரும் அரும் பொருட்காட்சி தொடந்து 12 நாட்கள் நடந்தது. 1992 இல் நாவலர் கலாச்சார மண்டபத்திலும், 1993 இல் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் 1994இல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் இது காட்சிப்படுத்தப்பட்டது.
1994 இல் தமிழ்ச்சமுதாயம் எடுத்த முத்தமிழ் விழாவில் கலைஞர் அவர்கள் “மாமனிதர்” என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். 1986 இல் எமது நாட்டில் வெடித்த உள்நாட்டு யுத்தம்காரணமாகப் பலபோதும் இவரது அரும்பொருட்களில் பெரும்பகுதி அழிக்கப்பட்டும், களவாடப்பட்டும் இழக்கப்பட்டுள்ளன,எஞ்சிய பொருட்களை பேனும் வகையில் பரமேஸ்வராச் சந்தி,பலாலி வீதியில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் பாதுகாத்து வந்தார்.
தேசியத்தவைர் பிரபாகரனால் மாமானிதர் வழங்கப்பட்ட இன்னுமொருவர் கலைஞானி செல்வரட்ணம்.இவர் காலைஞானி எல்லோராலும் அழைக்கப்பட்டுவந்தார்.ஈழத்தின் தொல்பொருட்சான்றுகளை சேகரித்த அவற்றை வருங்கால சந்ததிக்க வரலாறாக ஆதாரப்படுத்தும் பணி இன்றும் நினைவுகூரப்படுகிறது.
எத்னையோ வரலாற்றுச்சின்னங்கள் தெர்லபொருட்கள் ஆதார அபூர்வங்கள் ஆகியவற்றை தேடி எடுத்து அவற்றை ஆவணப்படுத்தி ஈழத்தின் வரலாற்று இருப்பை ஆதாரபூர்வமாக நிரூபித்தவர்.தன் வாழநாளில் 55 வருடங்களாக தனியாளாக இப்பணியில் ஈடுபட்டுவந்தார்.யாழ்ப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்பேராசிரியர்களும் இன்றும் இவரது பணியை பாராட்டி இவரைப்பற்றியே ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.
குரும்பசிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட இவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகக்கொண்டிருந்தார்.1995 இடப்பெயர்வின்போது இடம்பெயர்ந்து நாவற்குழிப்பகுதியில் தங்கியிருந்தார்.
அக்காலப்பகுதியில் இராணுவம் குடாநாட்டின்மீது மேற்கொண்ட ரிவிரச இராணுவ நடடிவடிக்கையின்போது இவர் பாடுபட்ட சேகரித்த அரும்பொருட்கள் பலவும் இராணுவத்தால் அழிக்கப்பட்டுவிட்டன.
இவருக்கு தேசியத்தலைவர் 1994 ஆம் ஆண்டு மாமனிதர் விருதுவழங்கினார்.