புரியாத புதிர்
சூரியக்கதிர் – 01, 02, 03 நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தின் போரிடும் திறனை நசுக்கிவிட்டான என்பது, சிங்கள அரடினது கருத்துமட்டுமல்ல; பெரும்பாலான உலக இராணுவ – அரசியல் ஆய்வாளர்களும் அவ்வாறே கருதினர்.
பாரிய முகாம் தகர்ப்புகளை புலிகளால் இனிமேல் நடாத்த முடியாது என்றும், அராசுக்கு தலையிடியைக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தாக்குதல்களை மட்டுமே புலிகளால் நடாத்த முடியும் என்றும், அவர்கள் கருத்துக் கூறியிருந்தனர்.
சுருக்காமாகச் சொன்னால், தீவிரம் குறைந்த ஒரு போர்முறையை (Low inten sive warfare) மேற்கொள்ளவே புலிகளின் தற்போதைய இராணுவ பலம் இடங்கொடுக்கும் என்று, பெரும்பாலான ஆய்வாளர்கள் ஆருடம் கூறியிருந்தனர்.
ஆனால், இத்தகைய படையியல் கணிப்பீடுகள் மற்றும் இராணுவ அபிப்பிராயங்கள் அனைத்தையும், ஓயாத அலைகள் மூழ்கடித்துவிட்டது.
தென்மராட்சி – வடமராட்சியிலிருந்து பொரீடாது பின்வாங்கிய புலிகளின் செயலை புரிந்துகொள்ள முடியாது திண்டாடிய இராணுவ உலகம், முல்லைத்தீவு படைத்தளத்தைப் புலிகள் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தி வெளியானவுடனும், புலிகள் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது விழித்தனர்.
மொத்தத்தில், இராணுவ உலகிற்கு அன்றும் – இன்றும் புலிகள் இயக்கம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
தலைவர் பிரபாகரனின் இராணுவச் செயற்பாடுகளில் உள்ள தனித்தன்மைகளே, புலிகள் இயக்கத்திற்கு இத்தகைய புதிர்த் தன்மைகளைக் கொடுத்துள்ளன.
புலிகள் இயக்கம் பற்றிய இராணுவ மதிப்பீடுகளை சமகால ஆய்வாளர்களால் சரியாகக் கணிக்க முடியாதுள்ளதற்குப் பிரதான காரணம், அந்த ஆய்வாளர் வைத்திருக்கும் இராணுவ அளவுகோல்கள் தான்.
இந்த அளவுகோல்கள், உலகின் இராணுவ சிந்தனையாளர்கள் மற்றும் புகழ் பூத்த படைத் தளபதிகள் ஆகியோரின் போதனைகள், அனுபவங்கள் என்பனவற்றால் ஆக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதற்கும் அப்பால், தலைவர் பிரபாகரனின் இராணுவ சிந்தனைகளும் செயற்பாடுகளும், பெரும்பாலும் தனித்தன்மை வாய்தவைகளாக அமைந்துள்ளன. இது காரணமாக தாம் வைத்திருக்கும் இராணுவ அளவுகோல்களைப் பயன்படுத்திப் பிரபாகரனின் போர்க்கலையைச் சரியாக அளந்து – கணிக்க முடியாது, வல்லுனர்கள் திண்டாடுகின்றனர்.
இதனால்தான், புலிகள் இயக்கம்பற்றி இராணுவ விமர்சகர்கள் கூறும் கருத்துக்கள், கணிப்புக்களில், அடிக்கடி பெருந் தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன.
என்றைக்குத் தலைவர் பிரபாகரன் தனது போர்க்கலை முறைகளை விரிவாக விளக்கி உலகிற்கு வழங்குகின்றாரோ அன்றைக்குத்தான், புலிகள் இயக்கம் பற்றிய புதிரும் விடுபடும்!
– 1996 சமகால ஆய்விலிருந்து…..
விடுதலைப்புலிகள் (ஆவணி, புரட்டாதி 1996) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”