லெப். கேணல் மகேந்தி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள்
லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10.06.2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப். கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்……….
லெப். கேணல் மகேந்தி 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் வீரச்சாவை தழுவிய லெப். கேணல் சூட்டி இவரது சகோதரன் ஆவார். 1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஊடுருவல் தாக்குதலை நடத்தியிருந்தார்.
யாழ். செல்லும் படையணியின் தளபதியாக விளங்கிய இவர், அக்கால கட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிம்ம செர்ப்பனமாக விளங்கினார். ஓயாத அலைகள் 03 இராணுவ நடவடிக்கையின் போது யாழ். பகுதிகளை கைப்பற்றும் சமரில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”