மேஜர் சோதியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
மேஜர் சோதியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
தமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
- தமிழீழ போராட்டத்தில் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா…..
- “விடியலின் சோதி” மேஜர் சோதியா நினைவலைகள்….
- சோதியா படையணி வீரம் இசைக்கும் “விழி நிமிர்த்திய வீரம்” இறுவெட்டு……..
யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின் போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இன்பநிலா அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் மதிவதனன் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை புலிவேந்தன் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”