போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்!
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்!
கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை…
“புலனாய்வுத்துறையின் தாங்கும் சக்தியாக ஒரு மாவீரனாக கேணல் சாள்சைப் பார்க்கின்றேன்”.
போர்க் களங்களில் தன்னை ஆகுதியாக்க கேணல் சாள்ஸ் பல தடவை முன்னின்றுள்ளான். ஆனால் போர் களத்தின் வெளியே நின்று போர்க் களத்தின் அழுத்தத்தின் சக்தியாக நின்றுஇ உழைத்து அந்த உழைப்பின் சக்தியாக நின்ற சாள்சை நினைவு கூரவேண்டும்.சில நடவடிக்கைகள் கடினமான சூழலில் கால நிர்பந்த நிலையில் அந்த நடவடிக்கையின் இயங்கு சக்தியாக கேணல் சாள்ஸ் இருந்தான்.
பிறேமதாச காலத்தில் எமது போராட்டம் அடுத்த சவாலை எதிர்கொண்ட போது தேசியத் தலைவருக்கு ஓரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது. அது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ணா சனாதிபதி பிறேமதாச படைத்தளதிகளால் திட்டம் தீட்டப்பட்டது.எமது தேசியத் தலைவரை கொன்று தாக்குதல்களைத் தொடுத்து தேசிய விடுதலைப் போராட்டத்தை இல்லாது அழிப்பதே அத்திட்டம்.
இந்த நிலையிலேயே அவர்களின் தலைநகரிலேயே அவர்களைச் செயற்பட முடியாதென்று நாம் அப்போது கற்பித்தோம். அதைச் செய்து காட்டியவன் சாள்ஸ்.
சாள்சின் ஆளுமை என்பது வரலாற்றில் அதீத தன்னம்பிக்கை வரலாற்றில் பெரும் வெற்றியாக அமைந்த கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல். அங்கு நம்மால் செய்ய முடியாத வெற்றிகளை எமது போராளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இதை விட பெரியது இருக்கு அதை நம்பிக்கையுடன் செய்வோம் என்று சாள்ஸ் சொன்னான்.
கொழும்பு களத்தில் கேணல் சாள்ஸ் பல வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளான். அதற்காக அவன் உழைத்த உழைப்பு மிக அதிகம்.
எல்லைக்கு வெளியேதான்
இவனின் உறைவிடம்
அதுவே மறைவிடமும்கூடஎத்தனை எழுதினும்
எழுத்திலோ பேச்சிலோ
அடக்கிட முடியா
உன்னத மனிதன் இவன்.கற்பனை என்றொரு
வார்ததை உண்டு தமிழில்.
அத்தனை கற்பனையும்
கடந்த வீரம் இவனது.இவன் காற்றின் வீச்சில்
கனல் எடுக்க தெரிந்த
கந்தக வித்தை தெரிந்தவன்.எத்தனை காலம் இவன்.
மூச்சை அடக்கி கொண்டே
பேரினவாத மூளைக்குள்.
துளையிட்டு போய் அமர்ந்திருந்தவன்.வெளியே தெரிந்த
பேச்சுவார்த்தைகளுக்கும்
சமாதான ஒப்பந்தங்களுக்கும் பின்னால்
எங்கோ ஒரு மூலையில்
சிரித்தபடியே சாள்ஸின்
வெற்றி நின்றிருந்தது.அண்ணையின் கண்அசைவு
ஒவ்வொன்றையும் இவனால்
முழுதாக மொழிபெயர்க்க முடிந்திருந்தது.
அதனால்தான் இவனால்
எரிமலையின் குழம்புமழையையும்
பூமிஅதிர்வின் பிரளயதையும்
வானத்தில் இருந்து
நெருப்பு மழையையும்
நிகழ்த்த முடிந்த அக்கினிகுஞ்சு இவன்.காலநதி ஓட்டத்தில்
கரைந்திட முடியாத
காவியபெரு வரலாறு இவன்.
தலைதாழ்த்தி வணங்குகின்றோம்.
மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன் ஆகிய மாவீரர்கள். தமிழீழ விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”