கப்டன் யாழ்வேங்கை
அக்கா……!
பழகிய நாட்கள் சிறிய காலங்கள் தான் என்றாலும்,நினைவலைகள் பல……
திருமலை தியாகவனத்திலே இருந்த காலத்தில் உங்களினை நான் முதல் தடவையாக சந்தித்தேன்; அக்கா என்றே அழைப்பேன் நீங்களோ அன்பாக தம்பி என்றே அழைத்தீர்களே!
அன்றைய காலம் சாப்பாட்டுக்கே கஷ்டமான காலத்திலும் உங்களின் கடமையிலே சளைக்காதவர். நான் கண்டது உங்களின் கடமையின் கண்ணியத்தை அக்கா. பதுங்கு குழிக்காக மரக்குத்திகளை தூக்கிச் செல்லும் போது சளைக்காத வீராங்கனையாகவே கண்டேன்…
நகர்வுக்கு போன போது சாப்பாடு இல்லாமல் இருந்தவேளை என்னிடம் இருந்த சொக்லேற்றுகளை உங்களுக்கு தந்தேன். நீங்களோ அதை எனக்கும் தந்து அங்கே இருந்தவர்களை சோரவிடாமல் உறுதியாக இருந்தீர்கள் அக்கா.
பின்னர் நான் வன்னி வந்தேன் அதன் பிறகு உங்களின் தொடர்பு கிடைக்கவில்லை. சிறிய காலத்துக்கு பிறகு உங்களுடன் தியாகவனத்தில் இருந்த வாணி அக்காவை சந்தித்தேன் அவரிடமும் விசாரித்தேன். நீ இங்கால மன்னார் களமுனையில் நிற்பதால் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்பு நாளில் பண்ணிலாக்காவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரிடம் என்னை விசாரித்ததாக பண்ணிலாக்கா கூறினார்.
அந்த சந்தர்ப்பம் ஒரு நாள் கிடைத்தது ஆம் அது நான் வட்டக்கச்சியில் இருந்து புதுக்குடியிருப்புக்கு வரும்போது பேருந்தில் உங்களை கண்டேன். நீங்களும் என்னைக் கண்டவுடன் சந்தோசமாக கதைத்திர்கள். என்னை பார்க்க எனது அம்மா வந்திருந்தாஅவருடனே வந்தேன்; அம்மாவுடனும் பேசிவிட்டு சந்தோசமாக போனீர்கள்.
அப்போது நான் விளையாட்டாக சொன்னேன் என்ன அக்கா ஆமி வாறன் போலகிடக்கு உங்கள் பக்கத்தால என்ன செய்கின்றீர்கள் என்று… “தம்பி வரட்டும் அவன் எங்களை தாண்டி வாரதென்றால் என்னுடைய உயிர் போன பிறகுதான் வரணும்” என்று சொன்னீர்கள்.
காலம் பதில் சொல்லும் என்றிர்கள்.
காலங்கள் கடந்தன…………..
காற்றலையில் செய்தியாக வந்தது……..
கப்டன் யாழ்வேங்கை வீரச்சாவு………….. ஒருகணம் உறைந்து போனது அந்த உன்னதமான வேங்கை விழி மூடிய செய்தி……
நினைவுப்பகிர்வு:- போராளி ஈகன்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”