கரும்புலிகள்
அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 27 ஆண்டுகள் கடந்துவிட்டன.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.
இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள்.
2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.
முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள்.
வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.
கரும்புலி வீரர்கள் பற்றி இன்று முழு உலகமும் பேசுகிறது அவர்களது மகத்தான தியாகத்தைக் கண்டு மலைத்துப்போய் நிற்கிறது. பூகம்ப அதிர்வாகக் குமுறும் எமது போராட்டத்தின் உக்கிரத்தை உலக சமுதாயத்திற்கு உணர்த்தியவர்கள் கரும்புலிகளே. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
||கரும்புலிகளின் உணர்வுகளை காற்றில் கலந்து……………….
- கரும்புலி கப்டன் மில்லர்
|| தமிழீழத் தாயின் மடியில் வேடியாகிச் சென்ற தேசப்புயல்கள் – உயிராயுதங்கள் நினைவில் நீளும் கவிதைகள்….
|| தேசப்புயல்கள் – உயிராயுதங்கள் வீரம் இசைக்கும் பாடல்கள்….
|| தேசப்புயல்கள் – உயிராயுதங்கள் நினைவில் நீளும் நூல்கள்…..
கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்….
தமிழீழத்தில் 2005 இருந்து 2008 வரையிலான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட கரும்புலி மாவீரர்களின் நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மற்றும் தளபதிகள்போராளிகள் போராளிகள்……..
யாழ். மாவட்டம் வடமாராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களின் நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வு……..
தமிழீழத்தின் மட்டுநகரில் ஓர் கரும்புலி வீரனின் தாயார்………….
தமிழீழம் கரும்புலிகள் நாளில் கரும்புலி மாவீரர்களின் வண்ணத் திருவுருவப் படங்களை தேரில் வைத்து பவணி வரும் வேளை…………………
கரும்புலி மில்லருடன் கரும்புலிகள் சகாப்தம் ஆரம்பமாகியது. என்றுமே உலகம் கண்டிராத, எண்ணிப் பார்க்கவும் முடியாத, தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
தமிழீழ தாய்மண்ணின் விடியலுக்காய் இன்றுவரை வீரச்சாவை அணைத்துக்கொண்ட எம் தேசத்தின் காவல் தெய்வங்களாகிய அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிருத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”