கடற்கரும்புலி மேஜர் பாலன்
யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.
எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை விடுதலைப்புலிகளின் தொடக்க காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான்.
அப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
மட்டக்களப்பு வாகரையில் இருந்து கடற்புலிகளின் சிறிய நடுத்தர இரண்டு விநியோகப்படகுகளும் அதற்குத் துணையாக ஒரு கரும்புலிப் படகும் ஆனி மாதம் 1997ம் ஆண்டு இரவு 06.50க்கு புறப்பட்டு செம்மலைய வந்தடைய வேண்டும்.
அன்றைய தினம் புறப்பட்ட கடற்புலிகளின் படகுகளை திருகோணமலை துறைமுகத்தில் (காபரில்) வைத்து, சிறிலங்கா கடற்படைக் கலங்கள் வழிமறித்தபோது அவர்கள் வேகமாக கடக்கவேண்டிய முக்கியமனா காப்பர் பகுதியை கடந்து புறாமலைக்கு வந்த வேளையில்…, கடற்புலிகளின் விநியோகப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டமையால் ஒரு படகு பாரிய சேதத்திற்குள்ளானது, இந்த நிலையில் இரண்டு விநியோகப் படகுகளிலும் இருந்த போராளிகளும், கொண்டுவந்து சேர்க்கப்பட வேண்டிய பொருட்களையும் ஒரு படகு சுமந்து செம்மலைக் கரைக்கு வருகின்ற அதே நேரம்……..
கரும்புலிப் படகு தேசத்திற்குள்ளான விநியோகப் படகை கட்டி இழுத்துக்கொண்டு வருகின்ற ஒருபுறத்தில் நடைபெற்றது.
சிலவேளைகளில் அவனது கைகளில் சிக்கி களமுனை ஒன்றை அங்கு திறந்தே மேற்கொண்டு நகரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இன்றும் அப்படி தான் அந்த கண்காணிப்பு எல்லையை தொட்டநேரம் எமது படகு எதிரியின் விசைப்படகின் கண்களுக்குள் அகப்பட்டுவிட, அது அவனது மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி படகு சேதமடைகிறது.
அதுவும் இது ஒரு இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற ஒரு சாதாரண பயணம். பயணத்தின் போது எமது படகு திருகோணமலை துறைமுகத்தை தாண்டி நகரும்போது எதிரியின் கண்காணிப்பில அகப்பட்டுவிடாது அவனது கண்களில் மண்ணைத்துாவி தப்பி வருவதும் உண்டு.
இழுத்துக்கொண்டு வந்த படகில் தண்ணீர் ஏறிக்கொண்டு இருந்தமையால் கடற்கரும்புலி மேஜர் பாலனும் இன்னொரு போராளியும் இணைந்து தண்ணீரே வெளியே ஊற்றிக்கொண்டு படகை இழுக்கும் பணியைத் தொடர்ந்தனர்.
அதேவேளை கும்புறுப்பிட்டி அருகில் வந்தவேளை மீண்டும் டோறா தாக்குதல் தொடுத்ததால் படகு இணைத்திருந்த கயிறு அறுந்து விநியோகப்படகு மூழ்கத் தொடங்கிய வேளையில் (கரும்புலிப் படகு தளம் நோக்கி விரைந்து விட்டது) கடற்கரும்புலி மேஜர் பாலன் கரை நோக்கி நீந்திச்சென்றார்கள்.
நீந்தி கும்பிரப்பிட்டியை அடைந்தபோது அங்கு சில துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிறிலங்காப் படையினர் அவரைக் கைது செய்தனர். காட்டிக் கொடுப்புகளால் போராட்டம் பல அழிவுகளை சந்தித்தது போன்றே இங்கும் இவனது கைதும் இடம்பெற்றது.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை. எதிரியிடம் அகப்பட்டு விட்டோம். மேற்கொண்டு அவனது சிந்தனைகள் பலவாறு சுழன்றடித்தது.
என்ன செய்வது,என்னை விசாரணைக்கு உடபடுத்தும் பட்சத்தில் அது நிச்சயம் சித்திரவதையாக இருக்கப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் வெளியேிடப்படாது காப்பாற்றப்பட வேண்டும். என்னை தவிர்த்து இந்த நடவடிக்கைக்கு வேறு ஒருவனாவது பயன்படலாம் அல்லவா. இப்படியாக அவனது சிந்தனைகள் பலவாறு சிந்திக்க தொடங்கியது.
அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான்.தன்னிடம் இருந்து இரகசியங்கள் வெளியேறாது இருப்பதானால் தன்னை தானே அழித்து கொள்ளவேண்டும்.
இங்கு தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான் அவன். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அவன் அந்த அசாதாரணமான முடிவையெடுத்தான்.
“தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான்.
ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில் தான் அவன் அந்த முடிவையெடுத்தான்.
நினைத்தும் பார்க்க முடியாதது அது. “தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.”
ஒரு மோதலுக்குப் பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.) அவனது வீரமரணமும் போராட்ட வரலாற்றில் ஒரு தனி பதிவாக ஆகிப்போனது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”