லெப். கேணல் குகன்
கடற்கலம் பலவற்றில் தலைசிறந்த சண்டைப்படகுகளின் விசையாலனாய் வியத்தகு இயந்திரப் பொறியியளாளனாய்…….
தமிழீழ கடல்தன்னில் ஓர் முறை சிங்கள கடற்படையுடன் பாரிய கடற்சமர் மூண்டது அந்த இரவுவேளை வானெங்கும் நட்சத்திரமும் இல்லை கரிய இருள் படர்ந்திருந்தது.
இலக்கை காட்டும் கருவியில் (ராடரில்) மற்றும் எதிரியின் துப்பாக்கி சீறும் தீச்சுவாலை எழும் திசை நோக்கி கடற்புலிகளின் கனரக ஆயுதம் எதிரிக்கு பதில் கூறியது. அதில் ஒரு டோறா எரிந்து முழ்கியவண்ணம் மற்றும் ஒரு டோறா முற்றிலும் தேசமாகி சுற்றியவண்ணம் இருந்தது. கரிய இருட்டும் கடலும் சற்று மாற்றத்துடன் மூசிக்கொண்டு எழுந்த வண்ணம் இருந்தது.
கடற்புலிகளின் படகுகள் கடலின் அனர்த்தமும் அது கடல் மைலுக்கு அப்பால் என்றமையாலும் மற்ற டோராக்கள் பாதுகாப்பிற்கு வந்தவண்ணம் இருந்தமையால் தளம் நோக்கி திரும்பின.
கடற்புலிகளின் தொகுதி படகில் இவர் சென்ற படகில் அனைவரும் வீரசாவடைய படகும் எதிரியின் தாக்குதலுக்குள்ளாகி சிறிது சிறுதாக தண்ணீர் படகில் புகுந்த வண்ணம் இருந்தது.
தளம்நோக்கி சென்றவர்களின் படகில் இவர்களின் தொகுதி தொடர்பற்று இருந்தது.
உடனே போராளிகள் ஒரு படகில் அந்தப் படகின் நிலை என்னவென்று அறிவதற்கு தாக்குதல் திடல் நோக்கி விரைந்தது கடலின் அனர்த்தத்தால் படகின் வேகம் குறைவாக இருந்தது.
இயற்கை எமக்கு சாதகமாக இல்லை அங்கே……………….
படகில் தண்ணீர் புகவும் …. சுற்றிக் கொண்டிருந்த டோறாவில் ஒரு சிங்களக் கடற்படையும் உயிருடன் இல்லை, ஆனால் இப்போராளி தன் படகிலிருந்து நீந்தி எரிந்த கொண்டிருந்த டோறாவில் ஏறி பின்பு மற்ற டோறாவில் ஏறும் நோக்கத்துடன் நீந்தினார்…. கடலின் வேகமும் களைப்பும் பசியும் இருந்தமையால் உடலின் இயங்கும் தன்மையும் குறைந்திருந்தது. அப்போது களைப்புடன் நீந்திச் செல்லுகையில் அந்த டோறாவுக்கு பாதுகாப்பிற்கு மற்ற டோறாக்கள் வந்து கொண்டிருந்தது. தாக்குதலுக்கு உள்ளான தமது படகை பாதுகாத்து கட்டி இழுத்து தமது தளம் கொண்டு செல்லும் நோக்குடன்……
எதிரியின் வேலைகள் பாதுகாப்புடன் நடைபெறுவதை அவதானித்த அவர் உடனே ஓர் முடிவு எடுத்தார். அன்று சில தாக்குதல் வியுகங்கள் மற்றும் விநியோக தரவுகளையும் தாம் அறிந்திருந்தமையால் அவைகள் பின்னைய நாட்களில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் தாம் உரையுடன் எதிரிவசம் பிடிபட்டால் ஆகையால் உடனே கழுத்தில் தொங்கிய குப்பியை எடுத்துக் கடித்தார். அவரன் கழுத்தில் இரு வில்லையுடன் கூடிய குப்பி இருந்தது.
கடித்த மறுகணம் பல நினைவுகள் கண்முன் வந்து போயின….
ஆயினும் என்ன அதிசயமோ தெரியவில்லை குப்பி வேலை செய்யவில்லை. இது என்னடா சகிப்புடன் அவரின் மனநிலை. நன்கு கடல் நீர் குடித்திருந்ததால் உப்புத் தண்ணீருக்கு இயங்கமறுத்தது சயனைட் வில்லைகள். (அன்றைய சம்பவத்தில் வரலாறாகியிருந்தால் பல போராளிகள் திறமையான ஓர் இயந்திர பொறியியளார்களாக தமிழீழ மண்ணில் அடையாளம் சென்றிருப்பார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.)
உடனே டோறாவுக்கு நீந்தி ஏறி மாறி தன் படகில் ஏறினார். இப்போது படகும் ஓரளவு மூழ்கி வந்தவண்ணம் இருந்தது.
பல மணிநேர பொழுது கடந்து செல்ல டோறாவும் கட்டி இழுத்து விரைந்தது. எமது தளத்தில் இருந்து யாராவது தப்பியிருக்க கூடும் என்ற நம்பிக்கையில் மீட்புக்கு சென்ற போராளிகளின் நம்பிகையும் வீண் போகவில்லை.
ஓயாத அலைகள் முல்லைப் படைத்தளம் மீதான கடற்சமரில் இவரின் திறனும் நன்கு பேசப்பட்டு, தேசியத் தலைவர், தளபதிகள் பாராட்டுதல்களையும் பெற்று பின்னரும் சில களம் நின்றது. அதனால் சில விழுப்புண்களையும் தாங்கிக்கொண்டார்.
சிறிய தொகை போராளிகளை உள்ளடக்கி விரிந்த இயந்திரத் துறையின் வளர்ச்சியில் லெப். கேணல் குகனின் பங்கும் அளப்பெரியது. தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிந்தன இவரின் கடமைகள். சண்டைப்படகு மற்றும் விநியோகப்படகுகள் அனைத்து வகையான கடல்சார் இயந்திரங்களை இயக்கம் அவதானிக்கும் மேற்பார்வை பொறியியலாளனாய்…….
ஓர் தாக்குதலில் தேசமடைந்து கடற்புலி லெப். கேணல் சதீஸ் அவர்களால் கொண்டுவந்த கரை இழுத்துவரப்பட்ட சிறிலங்கா கடற்படையின் டோறா படகு “MTU” டிசல் இயந்திரம். பின்னர் படகில் இருந்து கழட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு. கடற்புலிகளின் அணிகளுள் டோறா பிரிவு லெப். கேணல் சதீஸ் இயந்திரவியல் “லெப். கேணல் சதீஸ்” நினைவாக உதயமாகியது. அவைகளின் கடமைகள் படையணி சிறப்புத் தளபதியின் மேற்பார்வையில் விரிவாக்கம் பெற்று கடற்புலிகளின் கடல் சார் இயந்திரப்பிரிவில் இப்போராளி மிக்க முன்னுதாரணமாக மதிக்கபட்டு சில போராளிகளும் வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.
கடற்சமரில் ஒன்றில் லெப்.கேணல் குகன் போராளிகளுடன்…..
அனைவரின் மதிப்பையும் பெற்ற இவர் விநியோகத்திலும் திறம்பட செயற்பட்டு எந்த கடலும் இவரின் கையில் அடக்கம் எனும் நிலையை உருவாக்கி பல கடற்சமரிலும் முழங்கினார்.
சமாதான மேகம் படர்ந்திருந்த தமிழீழத்தில், கிழக்கு மாகாணத்திலிருந்து விநியோகப்பணி மேற்கொள்ளும் வேளையில் அன்று கிழக்கில் நடைபெற்ற தூரோக நடவடிக்கையின் பாதிப்பு இவர்களை காவு கொள்ளும் என்று யாரும் நினைக்கவில்லை.
ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள்.
ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன.
அவர்களின் பயணத்தின் போது………………………
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள்.
அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது.
இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது.
எங்கிருந்து வருகின்றீர்கள்?
எங்கே செல்கின்றீர்கள்?
எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை….
ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன.
பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது…………
தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது………..
ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள்.
லெப். கேணல் குகனே அந்தணப் படகின் கட்டளை பொறுப்பாளனாக நின்றான். தன் கண்முன்னே தம்முடன் நாளும் விடுதலைக்கு உழைத்தவர்களின் சாவு நிகழ்கின்றது என உள்ளம் குமுறியிருப்பான்.
என்னதான் செய்யமுடியும்………..?
அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே…………….
கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது.
கரும்புலிப் படகும் திசைமாறி சென்றது தாக்குதல் திட்டத்தை வகுத்துக்கொண்டு ஆனால் கரையில் காத்திருந்த துரோக ஓநாய்கள் தம் எண்ணம் நிறைவேறாது போனதால் குதறி குதறி கொன்றது அந்த மாமலைகளை………………
ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்.
தேசத்துக்கு உன்னால் பல கடமை விரிந்து உழைத்தவனே என அன்று தன் மேனியில் சுமந்து தாலாட்டி பாதுகாத்து வந்த கடற்தாயும் அந்த கரையில் வந்து மோதி குமுறியிருப்பாள்
நீ ஆடிய கடற்சமர் ஏராளம் – அதைப் பார்த்த விழிகளும் ஏராளம் – ஆயினும் அந்த உதடுகள் உன் வீரம் கூறாதா………. இங்கு மெளனித்த மனிதங்கள்……. ஓர் நாள் நீளும் உன் வீரத்தின் பக்கங்கள் அதில் நீ வரைந்த பல காவியம் மலரும். உன் கனவு நனவாகும் திசையில் என்றும் எம் மனதில் ஆசானாக, பாசமிகு அண்ணனாக நிறைந்தவனே!!!!
வெற்றிச் செய்தியுடன் வர காத்திருந்த தருணம் காலம் கொடுத்த படிப்பினை ஏற்று நீங்கள் நாளும் நேசித்த அந்த சூரிய தேவனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்,.
நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கி ஈழத்தை மீட்க கடலிலே காவியம் தொடர்வோம்!
நினைவுப்பகிர்வு:- அ.ம.இசைவழுதி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”