கரும்புலி லெப். கேணல் பூட்டோ வீரவணக்க நாள்
கரும்புலி லெப். கேணல் பூட்டோ வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். குடாநாட்டில் சிறிலங்கா படைத்தளப் பகுதி ஒன்றினுள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வேவு நடவடிக்கை ஒன்றின்போது 11.08.2006 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் பூட்டோ / கலையரசன் / சங்கர் ஆகிய கரும்புலி மாவீரரின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய்மண்ணின் விடியலின் தாகம் கொண்டு புயலான தேசத்தின் புயல் எனும் வீரம்….
மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே.
அன்றைய தாக்குதலின் நினைவாக ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற முழுநீளத் திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் தாக்குதலில் தான் பங்குபற்றிய ‘பூட்டோ’ என்ற கதாபாத்திரத்தில் தானே நடித்திருந்தார்.
தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார். பூட்டோ ‘கலையரசன்’ என்ற பேரில் கவிதைகள் எழுதினார். சில பாடல்களும் எழுதியிருக்கிறார்.
சக கரும்புலி வீரன் மேஜர் நிலவனுக்காக இவர் எழுதிய பாடலான ‘உணர்வின் வரிகள் வரையும் கோடு’ என்ற பாடல் அவற்றுள் முக்கியமானது.
நீளும் நினைவுகளாகி………….
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”