ஆணிவேர்
படம்:- ஆணிவேர்
எழுத்து இயக்கம்:- ஜான்
தயாரிப்பு:- சி.பிரபாகரன்.
ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை பதிவு செய்வதற்காக வன்னியை சென்றடையும் தமிழகத்தின் பெண் செய்தியாளர் ஒருவரின் திகில் மிக்க அனுபவப் பதிலாக கதை விரிகிறது. தான் உயிரென நேசிக்கும் தன்தாய் மண்ணிலிருந்து வெளியேற மறுத்து தன் மண்ணின் மைந்தர்களுக்கு போர்முகாமில் சிகிச்சை வழங்கிவரும் தொண்டர் – மருத்துவர் நந்தா. அவரையே சுற்றி சுற்றி வந்து அவரிடமும் அவரது தாயக பாசத்திடமும் மனதைப்பறிகொடுக்கும் இந்தியப் பத்திரியை நிருபர் சந்தியா. ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை பதிவு செய்வதற்காக வன்னியை சென்றடையும் செய்தியாளர் சந்தியா பல மாதங்களுக்கு தமிழீழத்தில் தங்கியிருந்து நேரடியாகவும், வாய் வழியாகவும் மக்களில் அவல வாழ்வை பதிவு செய்யும் இவர், யுத்தத்தால் சிதைவடைந்து காணப்படும் நிலப்பரப்பில் சமூக பணிகளுக்காக தன்னை அர்பணித்து நிற்கும் மருத்துவர் நந்தா மீது காதல் கொள்கின்றார். எனினும் கனத்த நினைவுகளுடன் தமிழகம் சென்ற இவர் மீண்டும் தமிழீழம் திரும்பி வன்னியில் மருத்துவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் ஈடுபடுகின்றார். இவரது தேடலின் போது பழைய நினைவுகள் இரைமீட்டப்படுகின்றன. கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலை, வலிகாம மக்களின் பாரிய இடப்பெயர்வு, கிளிநொச்சியிலும் வன்னியின் ஏனைய இடங்களிலும் இடப்பெயர்வையே வாழ்வாகக் கொண்ட மக்களின் அவல நிலை என வரலாற்றுக் காலத்திற்கும் இவரது நினைவுகள் சென்று விரிகின்றன. இவரது தேடல் எங்கே முடிகின்றது?
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”