மாமனிதர் திரு. தர்மரட்ணம் சிவராம் நினைவு வணக்க நாள்
மாமனிதர் திரு. தர்மரட்ணம் சிவராம் நினைவு வணக்க நாள் இன்றாகும்.
சிறிலங்கா அரசின் இன அடக்குமுறைக்கு எதிராக ஊடகத்தின் வாயிலாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்துவந்தபோது சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களால் 28.04.2005 அன்று கடத்தி செல்லப்பட்டு மறுநாள் காலை சிறிலங்கா தலைநகரில் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட மாமனிதர் ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.
இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்…” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு ஊடகவியலாளர் திரு. தர்மரட்ணம் சிவராம் அவர்களுக்கு வழக்கப்பட்ட தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது.
|| மாமனிதனின் நீளும் நினைவுகள்……….
தாயக விடியலில் தாகம் கொண்டு பல சர்ந்தப்பங்களில் தங்கள் உயிரை அர்பணித்து அனைத்து நாட்டுப்பற்றாளர்களுக்கும், மாமனிதர்களுக்கும், வெளித் தெரியாது தேசவிடுதலைக்கு உழைத்த மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”