கடற்கரும்புலிகள் கப்டன் ஈழவேந்தன், கப்டன் பூங்குழலி வீரவணக்க நாள்
கடற்கரும்புலி கப்டன் ஈழவேந்தன், கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லை மாவட்ட செம்மலையிலிருந்து 14.04.1998 அன்று மட்டக்களப்பிற்கு போரியல் தளபாடங்கள், போராளிகளை ஏற்றிக்கொண்டு சென்று தரித்து நின்றபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சிறிலங்கா கடற்படையின் டோறாவின் தாக்குதலில் விநியோகப் படகு உள்ளாகிறது. அதை பாதுகாத்து ஒரு படகு தரித்து நிற்கையில் 18.04.1998 அன்று அந்த விநியோகப் படகை மீட்கும் பாரிய நடவடிக்கையின் போது திருகோணமலைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஈழவேந்தன் (ஈழவன்), கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இவர்களுடன் இந்த வெற்றிகர கடற்சமரில் லெப். கேணல் றோசா உட்பட மூன்று கடற்புலிப் போராளிகளும் கடலிலே காவியம் படைத்தனர்.
|| வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..
இவர்களுடன் கடலிலே காவியம் படைத்தவர்கள்……….
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”