லெப். கேணல் ஜொனி வீரவணக்க நாள்
லெப். கேணல் ஜொனி வீரவணக்க நாள் இன்றாகும்.
இந்திய இராணுவத்தால் தமிழகத்திலிருந்து பேச்சிற்காக அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 13.03.1988 அன்று தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பைக் அறிய முற்பட்டு தோல்வியுற்றதால் முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரம் பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லெப். கேணல் ஜொனி அவர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்தூதுவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் லெப். கேணல் ஜொனி அவர்களை நயவஞ்சகமாகக் கொன்றனர்.
|| தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து தலைமையின் இருப்பை பாதுகாத்த வீரம்……
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”