எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை
அன்றைய தமிழர் இராட்சியம் விழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியரும், அயலவருக்கும், அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாறுத் திருபத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலமா இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒழித்துக் கொண்டிருக்கிறது.
சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ். ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கின்றார்கள். வீரம் சேர்ந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவ அர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புக்களுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்…
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”