கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………….
சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கட்டளை அதிகாரி கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் ஆகிய கடற்கரும்புலி உட்பட ஏனைய மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இத் தாக்குதலில் கடலிலே காவியம் படைத்த கடற்புலி மாவீரர்கள்…………
கப்டன் பவளரட்ணம் ( யோசப் கணேஸ்குமார் – மட்டக்களப்பு )
கப்டன் முடியரசி (தங்கராசா கலைமதி – யாழ்ப்பாணம்)
கப்டன் செங்கண்ணன் (சண்முகம் சிவகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் துமிலன் (வானரசன்) (நாகூரான் இராஜேந்திரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் உதயச்செல்வி (சுதா) (குமாரவேலு தீபா – யாழ்ப்பாணம்)
கப்டன் தர்சனா (சண்முகரட்ணம் விஜயகலா – யாழ்ப்பாணம்)
கப்டன் கனிவளவன் (கறுப்பையா யோகராசா – முல்லைத்தீவு)
மேஜர் மருதவாணன் (லோகச்சந்திரன் சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)
மேஜர்உலகப்பன் (மரியதாஸ் றொசான் – யாழ்ப்பாணம்)
மேஜர் கார்வேந்தன் (தம்ராசா வரதகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் உமா (சிங்கராசா இதயமலர் – கிளிநொச்சி)
கப்டன் திருவேலன் (ஈசன்) (முத்துக்குமாரசாமி சிவறஞ்சன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ராஜதரன் (சுவைக்கின் பற்றிக் – மன்னார்)
கிளாலிப் பகுதியில் 09.11.2001 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் பருத்தித்துறை – வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006 அன்று சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் லவனிதா, கடற்கரும்புலி கப்டன் சாந்தினி, கடற்கரும்புலி லெப்டினன்ட் அகவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”