கடற்கரும்புலி மேஜர் கடலரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
சிறிலங்கா கடற்படையின் ‘துன்கிந்த’ எரிபொருள் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் கடலரசன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர், கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் உட்பட ஏனைய சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………….
யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 30.10.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் “துன்கிந்த” எரிபொருள் வழங்கல் கப்பல் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் கடலரசன் / சமுத்திரன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர் / கேசவி, கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
யாழ். மாவட்டம் கோப்பாய்ப் பகுதியில் 30.10.1987 அன்று இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் நிசார் ஆகிய மாவீரரின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “சூரியக்கதிர் 01” படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் அகிலா, லெப். பூவிழி, வீரவேங்கை வேந்தன் ஆகிய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி…………
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் 30.10.2006 அன்று அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப். கேணல் வரதா / ஆதி ஆகிய மாவீரரின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”