கடற்கரும்புலி மேஜர் நளினன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி மேஜர் நளினன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலைத் துறைமுக கடற்பரப்பில் வைத்து 25.10.1996 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நளினன் / தில்லையன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் / கலையரசன் / பெரியதம்பி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்……
இவர்களுடன் இதே கடற்சமரில் கடலில் காவியமான……
2ம் லெப்டினன்ட் மதன் (நாகராசா குகதாசன் – விநாயகபுரம், அம்பாறை)
வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் 25.10.1985 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய (04) மாவீரர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் கப்டன் லோறன்ஸ், லெப்டினன்ட் சபா, 2ம் லெப்டினன்ட் லலித், 2ம் லெப்டினன்ட் ஜீவன் ஆகிய மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”