மாவீரனின் மகிமை
மாவீரனின் மகிமை இது ஓர் உண்மை சம்பவம்….
யாழ்மண்ணில் பாதை திறந்த வேளை மக்கள் வாசலில் ஆர்பரித்து ஆரவாரித்து மேள தாளத்துடன் பூரிபூடன் விடுதலைப் போராளிகளை வரவேற்றார்கள் அப்படி அரசியல் பணியும் …
கடற்புலி அரசியற் பிரிவும் இன்னும் விடுதலை விழிர்புனர்வுகளும் பல கட்டமாக முன்னெடுத்து காலம் நகர்ந்தது….
அன்று ஒரு நாள் குடிபோதையில் இருவர் விதியில் கட்டி புரண்டு சண்டை பிடித்தனர் அது பின்பு குடும்பசண்டையாக மாறி நீண்டது சில போராளிகள் அவ்விதியால் செல்லுகையில் பார்த்து சண்டை இல்லாமல் யாவரையும் பிரித்து விட்டு கலைந்து செல்லுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.
போராளிகளிடத்தில் மக்கள் கொண்ட மரியாதை நிமிர்த்தம் யாவும் ஓய்ந்து போனது…
|| அதில் சண்டை பிடித்தவரில் ஒரு குடும்பத்தில் ஒருவர் போராளியாகி மாவீரனாகி விட்டார்.
அந்த யாழ்மண்ணின் கிராமத்தில் அருகில் ஓர் துயிலுமில்லம்…
நாம் துயிலுமில்லம் துப்பரவு செய்து கொண்டிருந்த வண்ணம் இருந்தோம் மாலை பொழுது அப்போது அவ் விதியால் இருவர் வந்தனர் அதில் ஒருவர் மற்ற சண்டை பிடித்த வீட்டுக்காரர்.
எங்களை அடையாளம் காணவில்லை….
துயிலுமில்லத்துக்கு உள்ளே வந்து சில நினைவுக்கல்லில் பூக்களை தூவி விட்டு வானத்தையும் அண்ணார்ந்து பார்த்து பெரு மூச்சு ஒன்று விட்டு விதியில் ஏறச்சென்றார்…
அப்போது எங்கள் காதில் அவர்களின் உரையாடல் கேட்டது…
அவருடன் கூட வந்ததவர் அவருக்கு கூறினார்….
நீ பூ போட்ட கல்லில் இருப்பது யார் தெரியுமா…? என்றார்…
இல்லை ஏன் கேட்கிறாய்…?
நேற்று சண்டை பிடித்தாயே அவனின் மகன் …
நீ என்ன..!!! எல்லாவற்றையும் மறந்து போட்டியா நானாக இருக்கணும் என் பிள்ளைக்கும் அவனை வெட்டி விழ்த்தும் வரைக்கும் ஓயக்கூடாது என வளர்துவந்திருப்பேன்… நீயோ..!!! என்றார்….
குரோதத்தை துண்டிவிட்டார்…
அப்போது அந்த ஐயா கூறினார் …
மடப்பயலே கல்லுக்குடித்ததால என் புத்தி மங்கிபோய்விட்டது…
அத விடு…. அவன் பிள்ளை இந்த நாட்டுக்கு உயிர்தந்து எங்களினத்தின் காவல் தெய்வமாகி விட்டான். அப்படிப் பட்ட பிள்ளை எனக்கு பிறக்க வில்லையே என ஏக்கமும் தவிப்பும் தான் உள்ளது என்றார்.
காதில் அவ் வார்த்தை விழுந்ததும் எம்மை அறியாமல் கண்ணில் சிறு பனித்துளிகள்…
கார்த்திகை 27 மாவீரர் நாளில் அந்த மாலை வேளை மகனின் வீரக்கல்லறை மீது தந்தை முகம் புதைத்து அழுத வேளை அந்த தந்தையின் தோளில் ஆறுதலாக ஒரு கை வந்து ஆறுதல் கூறியது அது அன்று விதியில் சண்டை பிடித்தவரின் கரம்…..
நீளும் காவியங்கள் …
– இசைவழுதி.
|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||