போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து……
கடற்புலிகளின் கடாபி என்றால் அறியாதவர்களே இருக்கமுடியாது. சிறந்த போராளி, பொறுப்பாளன், சிறந்த தோழன், சிறந்ததோர் ஆசான் என தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களாலும்,சிறப்புத் தளபதிகள், போராளிகளால் ஆழமாக நேசிக்கப்பட்ட உன்னத போராளி.
எங்கள் கடற்புலிகளின் இயந்திரப்பிரிவு பொறுப்பாளன். தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏன் சிங்ககள தேசத்திலும் இவர் கடமை விரிந்து பின் நாட்களில் லெப். கேணல் கடாபியாக தேசக்கடமை முடித்து வரலாற்றில் மாவீரனாக நிலைத்து நிற்பவர். என்பது குறிப்பிடத்தக்கது.
போராளிகளின் மனங்களின் நிறைந்த பொறுப்பாளரின் (ஆசான்) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பிலிருந்து………….
இவ் இயந்திரம் சண்டைப் படகுகளிலும், விநியோகப்படகுகளிலும் உள்ளிணைப்பு – வெளியிணைப்பு இயந்திரங்களாக பயன்படுத்தப்பட்டது.
கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் “சதீஸ் இயந்திரவியல்” (டோறா ரீம் – டோறா இயந்திரம் (மெறேன் இஞ்சின்) அசோக் லேடன், வோட்டர் ஜெட், என பலவகையான கடல்சார் இயந்திரங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டன) என சில ஆண், பெண் போராளிகளை உள்ளடக்கி ஒரு சிறு அணிக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அந்தப் பிரிவிற்கு மேல்நிலைப் பொறுப்பாளராக லெப். கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான “தமிழ்முரசு” தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார்.
(டிசல் பிரிவுக்குள் டோறா இயந்திரம் (மெறேன் இஞ்சின்) அசோக் லேடன், வோட்டர் ஜெட், என பலவகையான கடல்சார் இயந்திரங்கள் உள்ளடக்கப்பட்டன)
குறுகிய நாட்களுக்கு தமிழீழத்தின் திசைகள் யாவும் பல விதமான இயந்திரம் சார்ந்த பணிகள் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில் வாழ்ந்த போராளிகளினால் அதில் குறிப்பிட்டு சொல்ல முடிந்தவை மக்கள் மத்தியில் ஒரு பணி “சுனாமி” ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தின் போது தமிழீழத்தின் கரையோரம் வாழ்ந்த மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் மீன்பிடி படகுகள், இயந்திரங்கள் பல சதீஸ் இயந்திரவியல், மங்கை படகு கட்டுமானம் இணைத்து பணியாற்றியமை.
கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பிரிவின் பொறுப்பாளராக இருந்தமையால் பட்டறையில் பலவகையான இயந்திர தெளிவூட்டல்கள், பயிற்சிகள் சில கடந்த போராட்ட வாழ்வில் பின்பற்றிய பிரச்சினைகள் பற்றி போராளிகளுக்கும், கடலில் எவ்வகையான பிரச்சினைகள் எதிர்க்கொள்ளப்படும், அதன் தீர்வுகள் பற்றி நாளும் போராளிகளுக்கு கூறிவந்தார்.
ஆயினும் ஒரு நாள் இரவு இயந்திர பட்டறைக்கு உள்ளிணைப்பு இயந்திரம் (அதாவது இந்த படத்தில் உள்ள இயந்திரம் ) வேலைக்காக வந்தது. அதைப் பற்றி சில போராளிகளுக்கு விரிவாக்கம் இல்லை, அந்தப் போராளிக்கு அதைப் பற்றி முதல் தடவை கடாபி அண்ணா அதன் விரிவாக்கம் கூறியிருந்தார். அன்று காலை எங்கள் முகாமின் கடமைகள் முடித்து, இயந்திர நிலையத்துக்குள் சுத்தம் செய்வதற்கு உள்நுழைந்த வேளை, அந்த வாசலில் அந்த இயந்திரத்துடன் வந்த மூன்று போராளிகள் நின்றனர்.
அந்தப் போராளிகளின் ஒருவர் இயந்திரத்தின் தோற்றம் வித்தியாசமாக இருந்தமையால் அதன் தெளிவைப் பெற அப்போது, உள்நுழைந்த போராளியைப் பார்த்து வினவுகிறார்.
இது எவ் வகையான இயந்திரம்?
(ஏற்கனவே படையணிக்குள் இயந்திரம் இணைக்க செல்லுகையில் போராளிக்கு நன்றாக அறிமுகமானவர்கள் அவர்கள்) ஆகையினால் …)
நகைச்சுவையாகவே கூறுகிறான் அந்த போராளி….
இதுதான்…. இதுதான்……
கடற்புலிகளில் புதிதாக இறக்கப்பட்ட கடாபி 4 ஸ்ரோக் இஞ்சின் என்று கூற……. சிரிப்பொலி சற்று மெளனத்துடன் அந்த இடத்தில்………
(அதாவது சண்டைப் படகுகளில் 2 ஸ்ரோக் இயந்திரம் தான் பயன்படுத்தப்பட்டது, அந்த இயந்திரம் உண்மையில் 4 ஸ்ரோக்)
அந்த போராளி…. நகைச்சுவையாக கூறிவிட்டு வாசலை நெருங்குகையில் …
இடையில் கண்டர் வாகனம் ஊடறுத்து நின்றதால் அவர்கள் பார்வையில் நேரே கடாபி அண்ணா அவர்களுடன் சில விடயம் கதைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் போராளி கடாபி அண்ணையைக் கண்டு தலையை சொரிந்து குறும்புடன் பார்க்க……. கடாபி அண்ணா சிரிப்பை அடக்கிய வண்ணம் பார்த்தார்.
இங்கே வா என அழைகிறார்.
என்ன சொன்னாய் …?
இல்லை…. எனக்கு பெயர் வடிவாக தெரியவில்லை “மேற்…..குறி” வடிவாக உச்சரிப்பு வரவில்லை……..
ஆதலால் ஆசானின் பெயரே உச்சரிபாய் வாயில் வந்தது.
அதனால்…… கூறினேன் “கடாபி 4 ஸ்ரோக்” என….
முதுகில் படார்…. என தட்டினார்.
அப்படியே அவர் வாகனத்தில் கவனம் எடுக்க மெதுவாக அந்த போராளி உள்ளே சென்று கடமையை முடித்தவுடன்.
அணிவகுப்பு மைதானத்தில் போராளிகள் அனைவரும் கூடி நிற்க எல்லோருக்கும் அன்று செய்ய வேண்டிய சில கடமைகள் விளங்கபடுத்தி விட்டு. கூறுகிறார் கடாபி அண்ணா …
அந்த போராளியைப் பார்த்து ….
“…… நீர் இன்றையிலிருந்து என்னை மாஸ்ரர் என்றும் அண்ணா என்றும் கூப்பிட வேண்டாம் கடாபி என்றே அழையும் என….”
அப் போராளி…. இல்லை மாஸ்ரர்….
அதுதான் சொன்னேன் அல்லவா…
இல்லை அண்ணா …..
கோபத்தை ஏற்படுத்தாதீர்… சென்று கடமையை செய்யும் என கூறிவிட்டேன் அவ்வளவுதான் என எழுந்து விரைந்து சென்றார்.
மற்ற போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது……
ஆயினும் பின்பு ..
ஏனைய போராளிகள் இண்டைக்கும் என்னடா நடந்தது வழமை போல் மாஸ்ர கோபபடுத்தினியா..?
என வழைமையான நட்புரிமைகளுடன் வினவினார்கள்.
நடந்தத சம்பவங்களை அந்த போராளிகள் கூறினார்கள்.
உனக்கு தேவைதான் என்றார்கள்.
மறுநாள் இன்னொரு தவறுக்கு சுத்தியல் நீண்ட தூரம் அந்தப் போராளியை நோக்கி பறந்தது.
ஆசானுக்கு தெரியும் என்றும் மாணவன் குறும்பாக இருந்தாலும் அவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டார்.
நம்பிக்கையாக முல்லைதீவிலிருந்து மன்னார் மாவட்டம் முதல் திருகோணமலை வரை மற்றும் படையணிகளுக்குள் இயந்திரம் பூட்ட சில தேவைக்கு தனிமையிலும் போராளிகளுடனும் அனுப்பினார்.
ஆயினும் கடமையில் கண்ணாக இருந்தும், தமிழீழத் தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி கடமையும் விரிந்தது.
ஒரு முறை சிறப்புத் தளபதி வேறு கடமைக்கு போராளியைத் தெரிவு செய்த வேளை கடாபி அண்ணையால் அப் போராளியின் பெயரும் பருந்துரைக்கப்பட நாட்டின் எல்லை தாண்டி சர்வதேசக் கடலிலும் விரிந்தது.
காலம் செல்ல அலைகடலில் காற்றில் தவழ்ந்து வந்தது கடாபி அண்ணனின் பிரிவு செய்தி…
லெப் கேணல் கடாபியாக கடமை முடித்து சென்ற எம் ஆசான்….!
நீர் நினைத்த விடுதலை காணும் தமிழீழம்
நீர் தொடர்ந்த தலைவனின் காலம் அதை வெல்லும்…
போராளிகள் சோலையில் கூடியிருக்கும் வேளை ஒரு குடும்ப வாழ்வே அங்கு கானகத்தை நிறைத்து தாயாக தேசியத் தலைவரின் முகம், தோழமையாக வழிகாட்டியாக மாவீரார்கள் (சக தோழ – தோழியரின்) சுவடுகள் எம்மை வழிநடத்தும்.
ஆயினும் லெப்.கேணல் கடாபி அண்ணனால் வளர்க்கப்பட்ட பல போராளிகள்……
திருமலை கடற்பரப்பில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் எவ்வண்ணம் நடந்தவை என்று இன்றளவும் விடை காணப்படாத தாக்குதலில் இவரின் பங்கு பற்றி அன்று லெப். கேணல் கடாபி அண்ணாவின் வீரவணக்க உரையிலே சிறப்புத் தளபதி கூறினார்…..
“திருகோணமலையில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி”
“15 ஆண்டுகளுக்கும் மேலாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழின விடுதலைக்காக பல்வேறு துறைகளில் உழைத்தவர் லெப். கேணல் கடாபி.”
“1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களமுனைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர்.”
“இவரின் திட்டமிடலாலும், பற்றினாலும் கடற்புலிகளின் முதன்மை இயந்திரப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட இவர், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உள்ளத்தில் ஆழமாக இடம்பிடித்த ஒரு போராளி.”
“தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்பரப்பில் பயிற்சிப் படகுகளை பார்வையிடுவதிலும், தலைவர் அருகிருந்து படகைச் செலுத்தும் இயந்திர வல்லுனராகவும் இருந்தார்.
இன்று அதிகாலை திருகோணமலையில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து கரும்புலி வீரர்களை வழியனுப்பியவர் கடாபி.”
“ஒரு காலை இழந்த போதிலும் தொடராக விடுதலைப் பயணத்திற்கு ஓய்வின்றி உழைத்த ஒரு விடுதலை வீரன் என்றார் அவர்.”
இவற்றுடன் எண்ணிப்பாருங்கள் இவரின் கடமைகள் எவ்வளவு காத்திரமானதும், எவ்வகையான பணி என்றும்……
அவர்களுடன் என் உள்ளம் நிறைத்த ஆசான் லெப். கேணல் கடாபி அண்ணாவும் என்றும் என் உள்ளத்தில் நீளும் ஆயிரம் நினைவுகளில்………………….
நினைவுக் குறிப்பிலிருந்து:- இசைவழுதி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”