கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 10.07.1990 அன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் எடித்தார கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…………
|| இவர்கள் நீளும் நினைவுகளாகி…………….
இதே நாளில்………
தமிழீழத்தின் கிழக்கு மாவட்டத்தில், அம்பாறை கல்முனை பகுதியில் 10.07.1990 அன்று சிறீலங்கா இனவெறிப் படையினராலும், முஸ்லீம் காடையர்களினாலும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு பின்னர் எரியூட்டபட்ட 31 எம் உயிரினும் மேலான தமிழ்மக்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இனவெறிக் காடையர்களின் இனவாதப் பசிக்கு இரையாகிய எம் தமிழ் சொந்தக்களுக்கு எம் இதய அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”