நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்
நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்
திருகோணமலை துறைமுகத்தில் கொன்றழிக்கப்பட்ட இரண்டு சிங்கள கடல் ஓநாய்கள் “சூரயா – ரணசுரு” 19.04.1995 அன்று….
உண்மையில் முழுபரிமாணத்துடன் நடைபெறப் போகும் ஒரு பெரும் போருக்கு கட்டியம் கூறுவது போல்தான் மூன்றாம் ஈழப்போரானது ஆரம்பமாகியது. கடல், வான், தரைகளில் இப்போர் தீவிரமடையலாம் என்பதை கடந்த 14 மாதச் சண்டைகள் காட்டுகின்றன. அத்துடன் போர்முனைகளில் சில நிரந்தர முடிவுகள் ஏற்படபோகும் காலப்பகுதியாகவும் இந்த மூன்றாம் ஈழப்போர் அமையப்போகிறது என அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
1994 சித்திரை 19ம் திகதி அதிகாலை திருமலைத் துறைமுகத்தினுள் புகுந்த நான்கு கடற்கரும்புலிகள், இரண்டு சிங்களக் கடல் ஓநாய்கள, அவற்றின் படுக்கையில் வைத்தே கொன்றுவிட்டனர்.
இந்தக் கடற்கரும்புலித் தாக்குதலின்போது மூழ்கடிக்கப்பட்ட “சங்காய்” வகை அதிவேகப் பீரங்கிக் கப்பல்களை பொறுத்தளவில், இவை சிங்களக் கடற்படையின் முதுகெலும்பைப் போன்றவை.
இதனால் தான் “சூரயா – ரணசுரு” கப்பல்களின் இழப்பை கடற்படையின் முதுகெலும்பு மீது விழுந்த பலத்த அடி என அரசியல், இராணுவ வல்லுனர்கள் வர்ணிக்கிறார்கள்.
– உயிராயுதம் நூலிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”